8 year old kid died eating noodles கேரளாவில் நூடுல்ஸ் சாப்பிட்ட 8வயது சிறுமி மரணம் முழு விவரம்
8 year old kid died eating noodles கேரளாவில் நூடுல்ஸ் சாப்பிட்ட 8வயது சிறுமி மரணம் முழு விவரம் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமலி என்ற பகுதியைச் சேர்ந்த சோஜன் என்பவரது 8 வயது மகள் அங்கு உள்ள பள்ளியில் 3 வகுப்பு படித்து வருகிரார் இன்நிலையில் கடந்த திங்கள் இரவு அன்று நூடுல்ஸ் சாப்பிட்டதாகவும் அப்போது திடீர் என்று அவர் சாப்பிட்ட நூடுல்ஸ் அவரது தொண்டையில் சிக்கியிருக்கிறது. இதனால் சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக சிறுமி உயிரிழந்தார்.
நூடுல்ஸ் தொண்டையில் சிக்கி 8 வயது சிறுமி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.