IMPORTANT NEWS
9year old girl died of heart attack பள்ளியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி
பள்ளியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி
உத்தர பிரதேச மாநிலம், லக்னோ பகுதியில் மான்ட்ஃபோர்ட் பள்ளியில்,மூன்றாம் வகுப்பு படிக்கும் மான்விசிங் என்ற 9 வயது மாணவி சக மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்த சிறுமியை ஆசிரியர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஒன்பது வயது மாணவி, பள்ளியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
9year old girl died of heart attack