IMPORTANT NEWS

aavin cow loan scheme ஆவினில் கறவை மாடு கடன் வழங்கும் திட்டத்தில் ரூ.1,60,000 வரை கடன் பெறலாம் புதிய திட்டம் முழுவிவரம்

aavin cow loan scheme ஆவினில் கறவை மாடு கடன் வழங்கும் திட்டத்தில் ரூ.1,60,000 வரை கடன் பெறலாம் புதிய திட்டம் முழுவிவரம் இந்த புதிய திட்டம் பற்றி பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில், புதிய கடன் திட்டம் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதுடன் மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் விவசாயம் சார்ந்த உற்பத்தி பங்களிப்பை பெருக்கும் விதமாக பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாட்டு கடன் வழங்கும் திட்டத்தை பால் வளத்துறை மிக சிறப்பாக நடத்தி வருகிறது.

aavin cow loan scheme
aavin cow loan scheme

கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 210 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆவின் நிறுவனம் பெடரல் வங்கியுடன் இணைந்து ஒரு புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கடன் விண்ணப்பம் பெற்ற உடன் காலத்தாமதமின்றி அந்தந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்படும். கடனுக்கான வட்டி 9.5 சதவீதமாகும்.கடன் 24 தவணையில் திரும்ப கட்ட வேண்டும். ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரையில் எந்தவித பிணையும் இன்றி கடன் வழங்கப்படும். முறையாக கடனை திரும்ப செலுத்த உதவும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் தொகையில் 1% ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

இது தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்கங்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று நிலைத்த தன்மை உடைய சங்கங்களாக மாற்ற உதவுவதோடு வெண்மைப் புரட்சிக்கு வித்திடும். தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இதுவரை 1,69,673 கடன் விண்ணப்பங்கள் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. இதில் தகுதியுடைய அனைவருக்கும் உடனடியாக கடன் வழங்கப்படும். இன்று அதன் துவக்கமாக 10 பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் தலைமையகத்தில் வைத்து ஆவின் நிர்வாக இயக்குநர் வினீத் ஐ. ஏ. எஸ்,பெடரல் பேங்க் அலுவலர்கள் இக்பால் மனோஜ், கவிதா ஆகியோர் முன்னிலையில் கடன் வழங்கப்பட்டது

aavin cow loan scheme

மேலும் விவரங்களுக்கு 

CLICK HERE

Related Articles

Back to top button