address change in aadhar card online ஆதாரில் உள்ள முகவரியை ஆன்லைனில் மாற்றம் செய்வது எப்படி முழு விவரம்
aadhar card address change ஆதார் முகவரியை மாற்றம் செய்வது எப்படி

address change in aadhar card online ஆதார் அட்டை அவசியம் என்பதால் அதில் இருக்கும் தகவல்கள் மிகவும் சரியாக இருப்பது முக்கியமாகும். அந்த ஆதார் அட்டையில் உங்கள் பெயர், வயது, பாலினம், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் உள்ளடங்கியிருக்கும். இதில் ஏதேனும் தவறுகள் அல்லது எழுத்துப் பிழைகள் இருப்பின் அவற்றை எளிதில் சரி செய்துகொள்ள முடியும்.
ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை இ-சேவை மையங்களிலும், தபால் நிலையங்களிலும் மாற்றம் செய்யலாம். அதே போல் ஆதாரில் உள்ள முகவரியை மாற்ற செய்ய நீங்கள் எங்கும் அலையாமல் ஆன்லைனில் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்

குறிப்பு:-
உங்கள் ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணை இணைத்திருந்தால் மட்டுமே நீங்கள் ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்க முடியும் உங்கள் ஆதாரில் நீங்கள் எந்த செல்போன் எண்ணை பதிவு செய்திருந்த மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும்.
ஆதாரில் உள்ள முகவரி மாற்றம் செய்ய:-
முதலில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ https://myaadhaar.uidai.gov.in/ ஆதார் இணையதளத்திற்க்கு செல்லவும்
அடுத்து அதில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள் 12 இலக்க ஆதார் எண்னை உள்ளிடவும்
அடுத்து கீழ் உள்ள கேப்சாவை பதிவு செய்து சப்மிட் கொடுக்கவும் அதன்பின்பு உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவிட்டு உள் நுழையவும்
அடுத்து Update your Address Online என்பதை கிளிக் செய்யவும். உங்களிடம் சரியான முகவரி சான்று இருந்தால் “Proceed to Update Address” என்பதில் கிளிக் செய்யவும்.
அடுத்து உங்களது இருப்பிட முகவரியைப் பதிவு செய்து submit கொடுத்து முகவரிச் சான்றுக்கான சரியான ஆவணத்தின் ஸ்கேன் காப்பியை அப்லோடு செய்து ”submit” கொடுக்க வேண்டும்.
அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும் கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்
அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும். இந்த எண்ணை வைத்து உங்களது ஆதார் அப்டேட் ஸ்டேட்டஸை நீங்கள் பார்க்கலாம்.

முகவரி மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள்:-
பாஸ்போர்ட்,
ரேஷன் கார்டு,
வங்கி பாஸ்புக்,
தொலைபேசி கட்டணம் பில் ,
கேஸ் பில்,
வாக்காளர் அடையாள அட்டை,
டிரைவிங் லைசென்ஸ்
அல்லது உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் பெறபட்ட கடிதம்,
உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்