IMPORTANT NEWSTamilNadu News

Avaniyapuram Jallikattu Live 2024 அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி நேரலை

Avaniyapuram Jallikattu Live 2024  தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி அவனியாபுரத்தில் இன்று 15-ம் தேதி நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் தமிழக அரசு சார்பில் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி நடக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூரில் தொடர்ந்து 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

Avaniyapuram Jallikattu Live 2024 பார்க்க:-

சன் டிவி நேரலை CLICK HERE https://www.youtube.com/watch?v=se9ndrUE_Mo

தந்தி டிவி நேரலை CLICK HERE https://www.youtube.com/watch?v=WmomFqJJudo

நியூஸ் தமிழ் 24/7 நேரலை CLICK HERE https://www.youtube.com/watch?v=1kH7aquC6NM

ஐபிசி தமிழ் நேரலை CLICK HERE https://www.youtube.com/watch?v=2VuWbCZa_Kg

விகடன் டிவி நேரலை CLICK HERE https://www.youtube.com/watch?v=C3tAjIzyM4s

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரருக்கும், சிறந்த காளையின் உரிமையாளருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் வழங்கப்படவுள்ளது .

Avaniyapuram Jallikattu Live 2024
Avaniyapuram Jallikattu Live 2024

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் வருகிற 15-ஆம் தேதியும், பாலமேட்டில் 16-ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளார்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். பொங்கல் திருநாளான ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். இதற்காக விழாக்குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

16ஆம் தேதி பாலமேடு மஞ்சமலை ஆற்று திடல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக அங்கு வாடிவாசல் அமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

17ஆம் தேதியன்று உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கோட்டை முனியாண்டி திடலில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Madurai Jallikattu places dates 2024

Avaniyapuram Jallikattu Live 2024
Avaniyapuram Jallikattu Live 2024

அதேபோல் மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதியின் பெயரை குறிப்பிடக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காளையின் உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்க கூடாது எனவும் உத்தரவிட்ட ஐகோர்ட்டு, தீண்டாமை உறுதி மொழி எடுப்பது குறித்து மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைகளை ஏற்றி வாகனங்கள் வெள்ளக்கல் சாலை, திருப்பரங்குன்றம் சாலை, முத்துப்பட்டி சாலை வழியாக வருபவர்களுக்கு முத்துப்பட்டி சந்திப்பு வரை மட்டுமே அனுமதி. காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பில் நிறுத்திக் கொள்ளலாம்.

போட்டி நடைபெறும் இடத்திற்குள் காளைகள், அதன் உரிமையாளர்கள் அவருக்கு உதவியாளராக ஒருவர் மட்டுமே வரிசையில் நிற்க அனுமதிக்கப்படுவர். போட்டியில் பங்கேற்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதிசீட்டு, உரிய மருத்துவ தகுதிச்சான்றிதழை கொண்டுவர வேண்டும்.

Madurai Jallikattu places dates 2024

மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர், உதவியாளர் மதுபோதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.காளையின் மூக்கணாங்கயிற்றை நீக்குவதற்கு கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களையோ காளையின் உரிமையாளர் கொண்டுவரக் கூடாது.

மூக்கணாங்கயிற்றை நீக்குவதற்கு உரிய பயிற்சிபெற்ற அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். போட்டி நடைபெறும் பகுதியில் உள்ள வீட்டின் மாடிகளில் வீட்டின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. வெளி நபர்கள் யாரும் வீட்டின் மாடியில் தங்குவதற்கு அனுமதி இல்லை.மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள பத்து மதுக்கடைகளுக்கும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள 7 மதுக்கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

Avaniyapuram Jallikattu Live 2024

Related Articles

Back to top button