IMPORTANT NEWS
balloon stuck in throat தொண்டைக்குள் சிக்கிய பலூன் 13 வயது சிறுவன் உயிரிழப்பு

தொண்டைக்குள் சிக்கிய பலூன் 13 வயது சிறுவன் உயிரிழப்பு
ஹிமாச்சல் பிரதேசம், கங்கரா மாவட்டத்தில் இருக்கும் ஜ்வாலி கிராமத்தில் செர்ந்த சிறுவன் விவேக் (13). அங்கு உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமையன்று சிறுவன் பள்ளிக்கு செல்லும் போது , தனது கையில் இருந்த பலூனை ஊதி உள்ளார் .

மூச்சை உள்ளே இழுத்தபோது, சிறுவனின் தொண்டைக்குள் எதிர்பாராத விதமாக பலூன் சிக்கிக்கொண்டது.
உடனே பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க, உடனடியாக அங்கிருந்து உள்ளூர் மருத்துவமனைக்கு சிறுவன் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார் பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பதான்கோட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிறுவன் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்