boy fainted eating Smoke Biscuits Smoke பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் அலறி துடித்து மயங்கிய பகீர் வீடியோ

boy fainted eating Smoke Biscuits Smoke பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் அலறி துடித்து மயங்கிய பகீர் வீடியோ
தற்போது சமீப காலமாக திருவிழா கடைகள், கண்காட்சிகளிலும் ஸ்மோக் பிஸ்கட்டுகள் விற்பனை செய்துவருவதை பார்க்க முடிகிறது.
ஸ்மோக்கிங் பிஸ்கட் என்பது நைட்ரஜன் திரவம் சிலிண்டரில் இருந்து திரவ நைட்ரஜன் எடுக்கப்பட்டு அதனை பிஸ்கட்டில் சேர்த்தால் அதிலிருந்து புகை வரும். அதனை அப்படியே வாயில் போட்டுக்கொண்டால், அப்போதும் வாய் மற்றும் மூக்கில் புகை வரும். குழந்தைகளுக்கு Fun-ஆக தோன்றும் இந்த ஸ்மோக்கிங் பிஸ்கட் இதில் அதிகப்படியான புகை வருவதால் குழந்தைகளும் சாப்பிட அடம் பிடிக்கிறார்கள்.

இந்த Liquid Nitrogen திரவ நிலையில் உள்ள , நிறம், மணம், சுவைற்ற ஒரு வாயு ஆகும். இது எந்த பொருளையும் உடனடியாக உறைய வைக்கும். பெரும்பாலும் இதை Industries, Research labs போன்ற இடங்களில் பயன்படுத்துவார்கள். அதன் நீராவி தோல் திசுக்களையும் உறைய வைக்கும் இயல்பு கொண்டது. ஆக அதனை சிறிது விழுங்கினாலும் வயிற்றில் Liquid Nitrogen evoparation நடந்து, கடும் உடல் உபாதைகளை ஏற்படுத்தி மரணத்துக்கே வழிவகுக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சிறுவன் ஒருவன் அந்த ஸ்மோக் பிஸ்கட்டை சாப்பிட்டுவிட்டு ஸ்டைலாக வாயிலும் ,மூக்கிலும் புகை விடுகின்றான் அதன் பின்பு மூச்சு விட முடியாமல் கதறியதோடு மயங்கவும் செய்துள்ளான் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது.
boy fainted eating Smoke Biscuits
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்