car crash detection on pixel கார் விபத்தின் போது உங்கள் உயிரைக்காப்பாற்றும் கூகுள் புதிய அம்சம் முழு விவரம்
Google கார் க்ராஷ் டிடக்சன் முழு விவரம்
இந்த அம்சம் கூகுள் பிக்சலின் கார் விபத்து கண்டறிதல் அம்சம் இப்போது அமெரிக்காவைத் தாண்டி பல பகுதிகளில் கிடைக்கிறது. இந்தியாவுடன், இது இப்போது ஆஸ்திரியா, பெல்ஜியம், போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள பயனர்களுக்கு வெளிவருகிறது. இப்போதைக்கு, இந்த அம்சம் பிக்சல் 4a மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களிலும், பிக்சல் ஃபோல்டிலும் மட்டுமே கிடைக்கும். கூகுள் 2019 ஆம் ஆண்டில், கூகிள் கார் விபத்து கண்டறிதல் அம்சத்தை அறிவித்தது,
ஆனால் அது அமெரிக்க பார்வையாளர்களுக்கு மட்டுமே. இருந்தது இன்று முதல், இந்த அம்சம் இப்போது இந்தியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள பயனர்களும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு, பாதுகாப்பு அம்சம் Pixel 4a, Pixel 6a, Pixel 7, Pixel 7 Pro, Pixel 7a, Pixel 8 மற்றும் Pixel 8 Pro ஆகியவற்றில் மட்டுமே கிடைக்கும். உலகளாவிய சந்தைகளில் உள்ள பயனர்களுக்கு, இந்த அம்சம் பிக்சல் 4a மற்றும் அனைத்து பிந்தைய மாடல்கள் மற்றும் பிக்சல் ஃபோல்டிலும் கிடைக்கும். ஆங்கிலம், டேனிஷ், டச்சு, இத்தாலியன், ஜப்பானியம் மற்றும் இன்னும் சில மொழிகள் உட்பட 11 மொழிகளில் மட்டுமே இந்த அம்சத்தை அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கார் விபத்துக்குள்ளானல்:-
உங்கள் போன் கார் விபத்தானதைக் கண்டறியும் பட்சத்தில், தானாகவே உங்களுக்குத் தேவையான உள்ளூர் அவசர சேவை உதவி எண்களுக்கு கால் செய்யும்.
மேலும், விபத்து நடந்த இடத்தில் யாராவது இருந்தால், அவர்கள் உங்கள் மொபைலை எடுக்கும்போது, உங்கள் மொபைல் லாக் செய்யப்பட்டிருந்தாலும் லாக் ஸ்கிரீன் செய்தியையும் அவசரத் தகவலையும் அவர்களால் பார்க்க முடியும்.
இந்த அம்சம் சரியாக செயல்பட உங்கள் மொபைலில் சிம் ஆனது இணைப்பில் இருக்க வேண்டும். ஒரு வேலை இந்த அம்சம் தவறுதலாக செயல்பட்டால் 60 வினாடிக்குள் அந்த அழைப்பை ரத்து செய்ய வேண்டும்.
எவ்வாறு இயக்குவது.?
கார் கிராஸ் டிடெக்ஷன் அம்சத்தை இயக்குவதற்கு உங்கள் பிக்சல் மொபைலில் இருக்கும் பர்சனல் சேஃப்டி ஆப்பை திறக்கவும்.
அதில் ஃபீச்சர்ஸ் என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதில் கீழே இருக்கும் கார் கிராஷ் டிடெக்ஷன் என்பதை தொட்டு, செட்டப் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு அதில் கேட்டும் லொகேஷன், மைக்ரோஃபோன்களுக்கான அனுமதியை நீங்கள் உறுதிபடுத்த வேண்டும்.
இதே கார் கிராஸ் டிடெக்ஷன் அம்சம் ஆப்பிள் ஐபோனிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.