chennai metro rail whatsapp ticket வாட்ஸ் ஆப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி? வீடியோ வடிவில் முழு விவரம் chennai metro rail whatsapp ticket
how to buy Chennai Metro Rail tickets on WhatsApp வாட்ஸ் ஆப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி?
மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரயில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட நேரம் லைனில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் பயணிகள் சிரமத்தை குறைக்கும் வகையில் வாட்ஸ்அப்பில் டிக்கெட் பெரும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது
வாட்ஸ்அப்பில் நாம் எங்கு செல்ல வேண்டும் என்கிற விவரத்தையும் ஆன்லைனில் பணத்தையும் செலுத்தினால் டிக்கெட் உடனடியாக பெற்றுக் கொள்ள முடியும்
மெட்ரோ ரயிலில் தற்போது டிக்கெட் எடுக்க கவுண்ட்டர் டிக்கெட் வசதி ,பயண அட்டை முறை, க்யூஆர் கோடு முறை என உள்ளது இந்நிலையில் புதிதாக வாட்ஸ்அப்பில் எங்கிருந்தும் வேண்டுமானாலும் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட்டை எடுத்து கொள்ள முடியும்
மேலும் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் எடுக்கும் போது 20% தள்ளுபடியும் கிடைக்கும் இனிமேல், சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட் எடுக்க கவுன்ட்டர்களுக்கு செல்ல வேண்டாம். தங்களது செல்போன் மூலமே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்
வாட்ஸ்அப்பில் டிக்கெட் பெறுவது எப்படி:-
செல்ல வேண்டிய இடம், கட்டணத்தை வாட்ஸ்அப் செயலில் செலுத்தி வாட்ஸப்பில் டிக்கெட் பெறலாம்
மெட்ரோ ரயிலின் 8300086000 இந்த எண்ணை உங்கள் மொபைலில் சேவ் செய்து கொள்ளுங்கள்
அடுத்து வாட்ஸ்அப்பில் இருந்து அந்த எண்ணுக்கு Hi ‛ஹாய்’ என மெசேஜ் செய்யுங்கள்
அடுத்து அதில் ரயில் டிக்கெட் என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து நீங்கள் புறப்படும் ரயில் நிலையத்தின் பெயர், செல்லும் ரயில் நிலையத்தின் பெயரை பதிவு செய்யுங்கள்
அதன்பின்பு ஆன்லைன் மூலம் வாட்ஸ்-அப், ஜிபே, போன்பே மூலம் செலுத்தலாம்.
அதன்பிறகு ரயில் நிலையங்களில் உள்ள க்யூஆர் ஸ்கேனரில் காண்பித்து உள் நுழைந்து உங்கள் ரயில் பயணத்த தொடங்கலாம்.
அதன்பிறகு வெளியே செல்லும் இடத்தில் உள்ள க்யூஆர் ஸ்கேனரில் காண்பித்து ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
வாட்ஸ் ஆப்பில் டிக்கெட் எடுப்பது எப்படி வீடியோ பார்க்க:-
Experience the convience of ticket booking at your fingertips!
WhatsApp ticketing is here!#metrorail #chennaimetro pic.twitter.com/8qtbSNM0sR— Chennai Metro Rail (@cmrlofficial) May 17, 2023