chennai speed limit சென்னையில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு எந்த எந்த வாகனம் எந்த வேகத்தில் போகலாம் முழு விவரம்
speed limit chennai சென்னையில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு
சென்னையில் வரும் நவம்பர் 4ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு புதிய வேக கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன என சென்னை பெருநகர காவல் ஆணையரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்

சென்னையில் விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் அதை சீர் செய்யக்கூடிய வகையில் போக்குவரத்து காவல்துறை புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது.
அதன்படி நவம்பர் 4-ஆம் தேதி முதல்
ஆட்டோக்கள் 40 கி.மீ வேகம் வரை செல்லலாம்.
இரு சக்கர 50 கி.மீ வேகம் வரை செல்லலாம்.
இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகம் வரை செல்லலாம்
குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகம் வரை மட்டுமே செல்ல வேண்டும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இலகுரக வாகனங்கள் 60 km/h
கனரக வாகனங்கள் 50 km/h
இருசக்கர வாகனங்கள் 50 km/h
ஆட்டோக்கள் 40 km/h
குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் புதிய 30 km/h