clash between 2 bus driver பஸ் ஓட்டுவதில் போட்டி ஏற்ப்பட்டு ஒரு ஓட்டுநர் மற்றொரு ஓட்டுநரை கொன்று, உடலை 1km இழுத்துச் சென்ற கொடுமை
clash between 2 bus driver பஸ் ஓட்டுவதில் போட்டி ஏற்ப்பட்டு ஒரு ஓட்டுநர் மற்றொரு ஓட்டுநரை கொன்று, உடலை 1km இழுத்துச் சென்ற கொடுமை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நடந்ததுள்ளது
ஆந்திர மாநிலம் விஜயவாடா சேர்ந்த சீனிவாசராவ், மற்றும் குண்டூர் மாவட்டம் பழைய ரெட்டிபாலம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் ராஜு இருவரும் வெவ்வேரு தனியார் டிராவல்ஸ் பஸ் டிரைவர்கள்.
நேற்றுமுன்தினம் இரவு பெங்களூரில் இருந்து விஜயவாடா நோக்கி சீனிவாசராவ், சுதாகர் ராஜு இருவரும் அவர்-அவர் பஸ்களை ஓட்டிக்கொண்டு வந்தனர்’ தொடக்கத்தில் இருந்தே இருவரும் போட்டி போட்டு கொண்டு ஓட்டி வந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்காருபாலம் அருகே இரண்டு பஸ்களின் சைடு கண்ணாடி ஒன்றோடு ஒன்று உரசியது. இதனால் 2 டிரைவர்களும் பஸ்சை ஓட்டிய படி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
மகாசமுத்திரம் டோல்கேட் அருகே இரண்டு பஸ்களும் நின்ற போது டிரைவர் சுகாதகர் ராஜு கீழே இறங்கி போட்டி போட்ட சீனிவாசராவ், பஸ் முன்பு நின்று வாக்குவாதத்தில் இடுபட்டார்.உடனே கோபமடைந்த டிரைவர் சீனிவாசராவ், பஸ்சை இயக்கி சுதாகர ராஜூ மீது மோதி ஓட்டிச்சென்றார். இதில் பஸ்சின் அடியில் சிக்கிய சுதாகர் ராஜு சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் சுதாகர் ராஜு சடலம் பஸ்ன் அடியில் சிக்கிய நிலையில், சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சடலத்தை இழுத்து சென்றுள்ளார்.
இதை பார்த்த டோல்கேட் ஊழியர்கள் உடனெ போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் போலீசார் பஸ்சை நிறுத்தி டிரைவர் சுதாகர் ராஜுவின் உடலை கைபற்றி டிரைவர் சீனிவாசராவை கைது செய்தனர்.
மேலும் போலீசார் டோல்கேட் சிசிடிவி கேமிரா காட்சிகளின் ஆதாரங்கள் அடிபடியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.