diwali special train 2023 தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் முழு விவரம்
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள் முழு விவரம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி தெற்கு ரயில்வே சார்பாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
தீபாவளி பண்டிகையை ஒட்டி தாம்பரம் – நாகர்கோவில் – மங்களூரு இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கம் நவ.10ம் தேதி இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை நாகர்கோவில் சென்றடையும்
நவ.11ம் தேதி மாலை 2.45க்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.15க்கு மங்களூரு சென்றடையும்
நவ.12ம் தேதி காலை 10 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.10க்கு தாம்பரம் வந்தடையும் இந்த ரயில் நவ.10, 17, 24ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் – தென்னக ரயில்வே அறிவிப்பு
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 10-ஆம் தேதி 7.30 மணிக்கு ரயின் எண் ( 06061) புறப்பட்டு நாகர்கோவிலை அடுத்த நாள் காலை 7. 10 மணிக்கு சென்றடைகிறது
அதே போல நாகர்கோயில் இருந்து மங்களூருக்கு11ஆம் தேதி இந்த ரயில் மதியம் 2. 45 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5. 15 மணிக்கு மங்களூரை சென்றடைகிறது
அதே போல மங்களூரில் இருந்து தாம்பரத்திற்கு 12ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது அடுத்த நாள் காலை 5. 10 மணியளவில் தாம்பரம் வந்தடைகிறது.
சென்னை சென்ட்ரல் – திருநெல்வேலி கரிப் ராத் சிறப்பு ரயில் வரும் நவம்பர் 8, 15, 22 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். திருநெல்வேலி – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் நவம்பர் 9, 16, 23 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
சென்னையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் ரயில் திருநெல்வேலிக்கு அடுத்த நாள் காலை 11.45 மணிக்கு சென்றடையும்.
திருநெல்வேலியில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு அடுத்த நாள் அதிகாலை 3.45 மணிக்கு வந்தடைகிறது
சென்னை சென்ட்ரல் டூ புவனேஸ்வர் சிறப்பு ரயில் நவம்பர் 13, 20, 27 ஆகிய தேதிகளில் சென்ட்ரலில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மாலை 6.30 மணிக்கு சென்றடையும்
மறுமார்க்கத்தில் 06074 என்ற எண் கொண்ட ரயில் நவம்பர் 14, 21, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இது புவனேஸ்வரில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் பிற்பகல் 3 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.
சென்னை சென்ட்ரல் டூ சந்திரகாச்சி சிறப்பு ரயில் வரும் நவம்பர் 11, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு சந்திரகாச்சி ரயில் நிலையத்தை மூன்றாம் நாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் 06072 என்ற எண் கொண்ட ரயில் நவம்பர் 13, 20, 27 ஆகிய தேதிகளில் சந்திரகாச்சியில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு அடுத்த நாள் காலை 11 மணிக்கு வந்தடையும்.
திருநெல்வேலியில் இருந்து சென்னை-எழும்பூருக்கு சிறப்பு ரயில்
நவம்பர் 9, 16, 23 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.இந்தச் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து மாலை 6.45க்கு புறப்படும்
அதேபோல் மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3 மணிக்கு திருநெல்வேலிக்கு (வண்டி எண் 06069) புறப்படும்.
இந்த ரயில் நவ.10, 17 மற்றும் 24ஆம் தேதிகளில் இயக்கப்படும்.