e5 research human age be shortened முதுமை இனி இல்லை முதியவரை இளைஞராக மாற்றும் சோதனை வெற்றி
80 வயது முதியவரை 26 வயதாக மாற்றும் சோதனை
e5 research human age be shortened எலிகளின் வயதை குறைக்கும் சோதனை 70% வெற்றி பெற்றுள்ள நிலையில், இச்சோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டால் முதியவரை இளைஞராக மாற்ற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களின் வயதை குறைக்கும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது முதுமையில் உள்ளவர்களை இளமையானவர்களாக மாற்றும் சோதனை அது. இது தொடர்பாக எலிகள் மீது நடத்தப்பட்ட இந்த சோதனை 70 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டால் 80 வயது முதியவரை 26 வயது இளைஞராக மாற்ற முடியும் என கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜிரோசயின்ஸ் என்ற இதழில் தங்களது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில் பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களைக் கொண்டு வயதைக் குறைக்கும் ‘E5′ எனப்படும் வயது எதிர்ப்பு சிகிச்சை எலிகளுக்கு அளிக்கப்பட்டது. எலியின் மரபணுவில் நம்பமுடியாத அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தியது,இந்த சிகிச்சை ரத்தம், இதயம் மற்றும் கல்லீரல் திசுக்களின் எபிஜெனெடிக் வயதைப் பாதியாகக் குறைத்தது
மேலும் மூளையின் ஹைபோதாலமஸ் என்ற பகுதியிலும் இதன் மாற்றம் குறிப்பிட தகுந்த அளவுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இந்த ஆராய்ச்சி வயது குறைப்பு சிகிச்சையைச் சாத்தியமாக்குகிறது. ஆண் மற்றும் பெண் என இரு எலிகளிலும் வயதாகும் செல்களை பாதியாகக் குறைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விரைவில் இந்த பரிசோதனையை மனிதனிடம் நடத்த இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை வெற்றி பெற்றால் மனிதனின் வயது முதிர்வை தவிர்க்க முடியும்.