Education Scholarship for school students 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை முழு விவரம்
Education Scholarship for school students பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்புகல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ்,அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிட தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெறபெற்றோரின் ஆண்டுவருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். தகுதியுள்ளஅனைத்து மாணவியர்களுக்கும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக் கணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
மேற்படி ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்களை பெற்றோர் ஆண்டு வருமானச் சான்று மற்றும் சாதிச் சான்று நகல்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைைமயாசிரியர்களிடம் தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்கவேண்டும். அரசு பள்ளித் மாணவியர்களது விவரங்களை EMIS (Edcational Management Information system) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும் மேலும் விவரங்களுக்கு மாணவியர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Education Scholarship for school students
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/01/2024010589.pdf