free govt tour to arupadai veedu 2024 முருகனின் அறுபடை வீடுகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச ஆன்மிக சுற்றுலா விண்ணப்பிப்பது எப்படி
how to apply tamilnadu govt free Arupadai Veedu Tour Package
free govt tour to arupadai veedu முருகனின் அறுபடை வீடுகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச ஆன்மிக சுற்றுலா விண்ணப்பிப்பது எப்படி
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்கு அரசு சார்பில் இலவச சுற்றுலா செல்ல இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில், தமிழகத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளுக்கும் மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளதாக சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.
அதன்படி, முருகனின் அறுபடை வீடுகளாக உள்ள திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 200 பக்தர்களை ஆண்டிற்கு 5 முறை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 1,000 பக்தர்கள் அழைத்துச்சென்று தரிசனம் செய்து வைக்கப்படும்.தமிழ்நாட்டில் நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!இந்த முயற்சி இந்து சமய அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விடுத்த செய்திக்குறிப்பில்:-
முருக பெருமான் அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை திருத்தலங்களுக்கு மூத்த குடிமக்கள், ஒரே தடவையில் சென்று தரிசிக்க சிரமப்படுகின்றனர்.இவர்களின் குறையை போக்கும் வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் கட்டணம் இல்லாமல் அரசு சார்பில் மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
6 கோயில்களுக்கும் கட்டணம் இல்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 200 பேர் என ஆண்டுக்கு 5 முறை அழைத்து செல்லப்படுவர் .
வருடத்திற்கு 1,000 பக்தர்கள் என்ற கணக்கில் முதியவர்களை அழைத்துச்சென்று தரிசனம் செய்து வைக்கப்படும்.
இந்த முயற்சி இந்து சமய அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் ஜனவரி 28ம் தேதி தொடங்க இருக்கிறது.
இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதி உடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக ஆன்மிக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். மீதமுள்ள தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்துச் செல்லப்படுவர்
நிபந்தனைகள்:-
அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு ஆன்மிக பயணம் செல்வதற்கு தேர்வு செய்து அனுமதிக்கப்படுவர்
1. அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
2. அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவராகவும், 70 வயதிற்குட்பட்டவாராகவும் இருத்தல் வேண்டும்.
3. வயது சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
4. அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்களுக்கு போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவரின் சான்று பெற்று இணைத்தல் வேண்டும்.
5. அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரம் இணைக்கப்படவேண்டும்.
6. அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் தங்களுடன் சிறு குழந்தைகள் அழைத்து வர அனுமதி இல்லை.
7. ஆதார் கார்டு அல்லது நிரந்தரக் கணக்கு எண் (Pan card) நகல் இணைக்கப்பட வேண்டும்.
8. விண்ணப்பங்கள் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். பெற்றுக் கொண்ட விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து 22.01.2024 மாலை 5.00 மணிக்குள் அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
9. மேலும் விண்ணப்பங்கள் இத்துறை வலைத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து (hrce.tn.gov.in).
10. ஆன்மிக பயணம் செல்லும் பக்தரின் ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அதற்கான வருமான சான்று வட்டாட்சியரிடம் பெற்று இணைக்க வேண்டும்.
11. பக்தர்கள் ஒரு முறை மட்டுமே இப்பயணத்தில் கலந்து கொள்ள முடியும்.
விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய:-
free govt tour to arupadai veedu
More Details Click Here
https://hrce.tn.gov.in/hrcehome/index.php