IMPORTANT NEWSTamilNadu News

govt loan for dairy cow இரண்டு கறவை மாடுகள் வாங்க ரூ.1.20 லட்சம்  கடனுதவி பெற விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்

இரண்டு கறவை மாடுகள் வாங்க ரூ.1.20 லட்சம்  கடனுதவி பெற விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்

பொதுக் காலக் கடன் திட்ட விதிமுறைகளின்படி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் / இணையம், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களை பயனாளிகளாக தேர்வு செய்து 2 கறவை மாடுகள் வாங்குவதற்காக கடன் வழங்கப்படும்.

தமிழக அரசு சார்பாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட பொருளாதார மேம்பாடு கழக லிமிடெட் சார்பாக கறவை மாடு வாங்குவதற்கு கடன் உதவி திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

govt loan for dairy cow 
govt loan for dairy cow

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய மூலம் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களின் பயனாளிகளை தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு உயர்ந்த பட்சமாக ஒரு பயனாளிக்கு இரண்டு கறவை மாடுகள் வாங்க 1 கறவை மாடு ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் இர்னடு மாடுகள் வாங்க ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வாங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்:

மேலும் 3 ஆண்டுக்குள் கடனை திரும்ப செலுத்தலாம் ஆண்டு வட்டி 7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு:

18 முதல் 60 வயது வரை உள்ளவர் விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டுடோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினராக இருக்க வேண்டும்

ஆண்டு வருமானமாக 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க:

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

govt loan for dairy cow 

Related Articles

Back to top button