IMPORTANT NEWS

how to change address in aadhar card ஆதாரில் உள்ள முகவரி மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

how to change address in aadhar card ஆதாரில் உள்ள பிழையை ஆன்லைனில் சரிசெய்வது எப்படி?

ஆதார் என்றால் என்ன:-

ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் தனித்துவமா 12 இலக்க அடையாள எண் கொண்ட அட்டை ஆகும். இந்தியாவில் வசிக்கும் எவரும், ஆதார் எண்ணைப் பெற தாராளமாக பதிவு செய்யலாம். இந்த அட்டையில் அவரது பெயர், மற்றும் அவரை பற்றிய விவரங்கள் இருக்கும் ஆதார் என்றால் ஆதாரம் என்ற பொருள்படக்கூடிய சொல் ஆகும். இந்திய தனித்துவ அடையால ஆணையத்தால் வழங்கப்படும் தனித்துவ அடையாள எண்ணை குறிக்கும் சொல் ஆகும். அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கும் ஆதார் அட்டைகள் அவசியம். ஆதாரில் திருத்தம் செய்வது எப்படி:- ஆதார் அட்டை புதுப்பித்தல் மற்றும் திருத்தம் மூலம் ஆதாரில் பெயர், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி போன்ற அவர்களின் அடையாளச் சான்றில் உள்ள முக்கியமான தகவல்களை மாற்றலாம் மற்றும் புதுப்பிக்கலாம்.

ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பது பற்றி விண்ணப்பதாரர் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே. இனி ஆதார் அட்டை அவசியம் என்பதால் அதில் இருக்கும் தகவல்கள் மிகவும் சரியாக இருப்பது முக்கியமாகும். அந்த ஆதார் அட்டையில் உங்கள் பெயர், வயது, பாலினம், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் உள்ளடங்கியிருக்கும். இதில் ஏதேனும் தவறுகள் அல்லது எழுத்துப் பிழைகள் இருப்பின் அவற்றை எளிதில் சரி செய்துகொள்ள முடியும்.

how to change address in aadhar card
how to change address in aadhar card

ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை இ-சேவை மையங்களிலும், தபால் நிலையங்களிலும் மாற்றம் செய்யலாம்.அதே போல் தற்போது நீங்களும் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் ஆகியவற்றை ஆன்லைனில் சரி செய்து கொள்ளலாம் வாங்க உங்க ஆதார் விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி என்று பார்ப்போம்

மிக முக்கியமாக உங்கள் ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணை இணைத்திருந்தால் மட்டுமே நீங்கள் ஆன்லைனில் உங்கள் விவரங்களை மாற்ற முடியும் நீங்கள் எந்த செல்போன் எண்ணை பதிவு செய்திருக்கீற்களோ அந்த செல்போனில் ஓடிபி எண் வரும். அந்த ஓடிபி எண்ணை வைத்து ஆதாரில் உள்ள பிழைகளை மாற்றமுடியும்

ஆதாரில் உள்ள முகவரி மாற்றம் செய்ய

முதலில் https://eaadhaar.uidai.gov.in/#/ ஆதாரின் அதிகார்பூர்வ இந்த இணையதளத்தில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்கவும் அடுத்து கீழ் உள்ள கேப்சாவை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

அதைத் தொடர்ந்து முகவரி மாற்றம் என்பதை செலக்ட் செய்து கொள்ளுங்கள் அடுத்து உங்களின் புதிய முகவரிகளைக் கொடுத்து பின் அதற்கான ஆதாரத்தையும் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும். அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்

கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும் அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும்.

அதன் பிறகு நீங்கள் உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்நீங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து விட்டீர்கள் அடுத்து உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா என்று தெரிந்து கொள்ள https://eaadhaar.uidai.gov.in/#/ இந்த இணையதளத்திற்கு சென்று URN எண்கள் மற்றும்ஆதார் எண் பதிவிட்டு ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை அறியலாம். 

how to change address in aadhar card

More Details Click Here

Related Articles

Back to top button