human finger found in ice cream ஐஸ்கிரீமிற்குள் இருந்த மனித விரல் வைரல் வீடியோ

மும்பையில் மலாடில் வசிக்கும் ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ் என்ற மருத்துவர், மதிய உணவு இடைவேளையில் யம்மோ நிறுவனத்தின் பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கீரீமை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.
அப்போது, ஐஸ்கிரீமில் ஏதோ தட்டுப்படுவதுபோல் உணர்ந்துள்ளார். அதில் என்ன இருக்கிறது என்ற கூர்ந்து பார்த்தவர், துண்டிக்கப்பட்ட மனித விரல் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் இது குறித்து அந்த பெண் உடனடியாக காவல்நிலையில் ஐஸ்கீரிமுடன் சென்று புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கோன் ஐஸ்கிரீமில் இருந்தது மனித விரல் உறுதிப்படுத்துவதற்காக, ஐஸ்கிரீமில் கிடைத்த விரலை எப்.எஸ்.எல்.க்கு (தடயவியல்) பிரிவுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காக யம்மோ நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.போலீசார் ஐஸ்கிரீமில் இருந்த மனித விரலை தடயவியல் ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
ஐஸ்கீரிமில் மனித விரல் இருந்தது தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளன.
இதனிடையே மருத்துவர் செர்ரோ தனது இன்ஸ்டாவில் ஆன்லைன் ஆப் மூலமாக 3 கோன் ஐஸ்களை நான் ஆர்டர் செய்தேன். அதில் ஒரு ஐஸ்கீரிம் பட்டர்ஸ்காட்ச் பிளேவர் ஆகும். மிகவும் பிடித்தமான அந்த பிளேவர் ஐஸ்கிரீமை பாதியளவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திடமான ஒரு பொருள் கடிபட்டது. முதலில் அது சாக்லேட் துண்டு அல்லது நட் ஆக இருக்கும் என நினைத்தேன். சரி அது என்னவென்று பார்ப்பதற்காக துப்பினேன்.வித்தியாசமானதாக இருக்கிறதே என்று நான் உற்று பார்த்த போது, நகம் மற்றும் விரல் ரேகை தெரிந்தது. கட்டை விரல் போல இருந்ததால் நான் ஒரு நிமிடம் நிலைகுலைந்துவிட்டேன். உடனடியாக அதை எடுத்து ஐஸ்பேக்கிற்குள் வைத்து காவல்துறையிடம் புகார் அளித்து இருக்கிறேன். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐஸ்கிரீமிற்குள் கிடந்த விரலை தடயவியல் சோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்
வீடியோ பார்க்க