IMPORTANT NEWSrecipes

jackfruit leaves idli மருத்துவ குணம் நிறைந்த பலா இலை இட்லி செய்வது எப்படி 1 முறை இப்படி செய்து பாருங்க

Idlis Steamed In Jackfruit Leaves பலா இலை இட்லி செய்வது எப்படி

jackfruit leaves idli மருத்துவ குணம் நிறைந்த மங்களூரு பலா இலை இட்லி செய்வது எப்படி மங்களூருவில் பலா இலை இட்லியை கடுபூ, மங்களூரு இட்லி என அழைப்பார்கள்

உலகில் சிறந்த உணவாகத் தேர்வு செய்யப்பட்டது இட்லிதான் சிறுவர், முதியவர்கள், என அனைவரும் விரும்பி உண்ணும் உணவு இட்லியை பல வடிவங்களில் சமைக்கலாம். கிளாஸ் இட்லி, ஹார்ட்டின் வடிவ இட்லி, குஷ்பூ இட்லி என பல வடிவங்களில் இட்லி தயாரிக்கப்பட்டாலும், அண்மையில் பெங்களூருவில் ஐஸ்குச்சி இட்லி அனைவரையும் கவர்ந்தது.

jackfruit leaf idli
பலா இலை இட்லி செய்வது எப்படி

jackfruit leaves idli

அதேபோல் பலா இலை இட்லி உண்பதன் மூலம் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். பலா இலைகளைக் கொண்டு கூடை போல வடிவமைத்து, அதில் இட்லி மாவை ஊற்றி வேகவைத்து தயார் செய்வது பலா இலை இட்லி.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 2 கப்,

உளுந்தம்பருப்பு – 1 கப்,

தேங்காய் துருவல் – 1 கப்,

தேவையான அளவு கல் உப்பு,

பலா மரத்தின் இளம் இலைகள்.

செய்முறை:-

பச்சரசி, உளுந்தம் பருப்பையும் தனித்தனியே தண்ணீரில் ஊறவைத்து தேங்காய் துருவலுடன் சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். இந்த கலவை 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். சுத்தம் செய்த 4 பலா இலைகளை எடுத்துக் கொண்டு, அதன் நுனிப் பகுதியை 4 திசைகளில் வைத்து ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கும் வகையில் சிறு குச்சியால் குத்தி இணைத்து பலா இலை கப் அல்லது தொன்னை தயார் செய்யது, மாவு கலவையை பலா இலை தொன்னையில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்க, பலா இலை வெந்த மனம் வந்தவுடன் , இட்லி பாத்திரத்திலிருந்து எடுத்து, பலா இலைகளையை அகற்றி சூடாக பரிமாறலாம். பலா இட்லியுடன் சட்டினி, சம்பார், இட்லி பொடி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

jackfruit leaves idli

jackfruit leaves idli

More Details

Related Articles

Back to top button