karuvalayam poga tips tamil கண்களை சுற்றியுள்ள கருவளையம் நீங்க நச்சுனு 10 டிப்ஸ் இதோ
dark circles under the eyes removal tips கருவளையம் உடனே போகனுமா இதோ டிப்ஸ்.

karuvalayam poga tips tamil பொதுவாக கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் நம் முகத்தை மட்டும் அல்ல நம் உடலையும் சோர்வாகவே காட்டும். கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் வர முக்கிய காரணங்கள் தூக்கமின்மை மன அழுத்தம் மனச்சோர்வு கவலை உணவு பழக்கங்கள் மற்றும் உணவில் அதிகம் உப்பு சேர்ப்பது போன்ற அனைத்தும் நாம் தொடர்ந்து கடைபிடிக்காததால் தான் நம் கண்களுக்கு கீழ் கரு வளையம் போல் உருவாகின்றது
நம் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை நாம் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுலபமாக சரி செய்து நல்ல தீர்வை காணலாம்

Tips 1 பசும் பாலை பஞ்சில் நனைத்து கண்களுக்கு கீழ் தடவி வர கருவளையம் நிறம் மாறி நம் முகமும் பொலிவுடன் அழகாகவும் தோன்றும்
Tips 2 அதேபோன்று கருவளையத்துக்கு ஒரு நல்ல தீர்வாக பன்னீர் இருக்கும் .ஆம் பன்னீரை பஞ்சில் தொட்டு கருவளையத்தில் தொடர்ந்து ஒரு வாரம் நாம் தடவி வந்தால் மெல்ல மெல்ல கருவளையம் மறைந்துவிடும்
Tips 3 சுத்தமான குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து பேஸ்ட் போல் அந்தக் கலவையை கண்களுக்கு கீழ் தடவி வர கருவளையம் மறையும்
Tips 4 கற்றாழை கருவளையத்திற்கு ஒரு நல்ல தீர்வை தரும் என்றே கூறலாம் கற்றாழையை தோல் சீவி நீரில் நன்றாக அலசி மிக்ஸியில் அரைத்து ஜெல் போன்று வந்ததும் அதை கருவளையத்தின் மீது தேய்த்து வந்தால் கருவளையம் இருந்த சுவடே தெரியாது மேலும் அந்த கற்றாழை ஜெல்லயை முகத்திலும் தடவி வர முகமும் பருக்கள்,கரும்புள்ளிகள் நீங்கி பொலிவுடன் காணப்படும்
Tips 5 கருவளையத்திற்கு பாதாம் ஆயிலை தினம் தடவி வர கருவளையம் காணாமல் போகும்
Tips 6 உருளைகிழங்கு கருவளையத்திற்க்கு அருமருந்தாகும் உருளைக்கிழங்கை சாறு எடுத்து அதை கண்களுக்கு கீழ் தடவி வர கண் கருவளையம் குணமாகும்
Tips 7 வைட்டமின் ஈ மாத்திரை எண்ணையை கண்களுக்கு கீழ் தடவி வர கண் கருவளையம் சரியாகும்

Tips 8 உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றூடன் 2-3 சொட்டு தேண் கலந்து காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.
Tips 9 நேரம் கிடைக்கும் போது அல்லது இரவு படுக்க போகும் போது வெள்ளரிக்காய், அல்லது உருளைக்கிழங்கு இவற்றை வட்டவட்டமாக வெட்டி கண்களில் மேல் வைக்கலாம். இதனால் கண்கள் குளிர்ச்சியாகின்றது, சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
Tips 10 கண்ணுக்கு கீழ் உள்ள கரு வளையத்திற்க்கு தினமும் எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு சாறு அல்லது தக்காளி சாறு போன்ற வைட்டமின் சி அதிகம் நிறைந்த சாறுகளை கருவளையத்தில் தொடர்ந்து தடவி வர கருவளையம் குறையும்.
மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒருமுறையை தினமும் கடைபிடிக்கவும் , அதேபோல் தினமும் ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூக்கம் அவசியமாகும் அதிக நீர் சத்து உள்ள காய்கறிகளை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது,தினமும் உடற்பயிற்சி அல்லது யோகா செய்வதன் மூலம் நம் உடலுக்கு ஆரோக்கியத்திற்கும் புத்துணர்ச்சியை அளிக்கும், இரவு நேரத்தில் அதிகமாக கம்ப்யூட்டர் அல்லது செல்போனை பார்ப்பதை தவிர்க்கவும்
குறிப்பு:- மேற்குறிப்பிட்ட முறைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் ஒரு நாள் பயன்படுத்தி மறுநாள் தீர்வு கிடைக்காது