lpg subsidy check online சிலிண்டர் மானியம் வங்கி கணக்கில் வருதா ஆன்லைனில் செக் பண்றது எப்படி?
How To Check For Gas Subsidy சிலிண்டர் மானியம் வரவில்லையா சரிபார்ப்பது எப்படி
lpg subsidy check online
மானியம்:-
நாம் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் கொடுத்து வருகிறது.மானியத்துடன் கூடிய ஒரு சிலிண்டரின் விலை தோராயமாக நாம் ரூபாய் 900 விற்பனை விலை என்றால் நாம் அந்த சிலிண்டரை 700 ரூபாய் கொடுத்து தான் வாங்குவோம் மீதம் 200 ரூபாய் மத்திய அரசின் மானியம் ஆகும். அரசே நேரடியாக அந்த மானியதொகையை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்து விடும்
மானியதிட்டம்:-
இதுவரை சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்கு பதிலாக, நுகர்வோராகிய மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியத்தைச் செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது அதாவது சிலிண்டருக்கான முழுத் தொகையையும் கொடுத்து நாம் வாங்க வேண்டும். மானியத் தொகையை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுப்பதற்க்கு பதிலாக நமது வங்கிக் கணக்குகளில் மத்திய அரசு செலுத்திவிடுவது தான் Direct Benefit Scheme
சமையல் சிலிண்டருக்கான முழு சந்தை விலையையும் கொடுத்து முதலில் சிலிண்டரை வாங்க வேண்டும். பின்னர் அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும்.
மத்திய அரசு மாதம் தோறும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது, அந்த பணம் நமது வங்கி கணக்கிற்க்கு தான் அந்த மானியம் வரும். ஆனால் நமது விரைவான வாழ்வில் நமது மானிய தொகை நம் வங்கி கணக்கிற்க்கு மாதம் தோறும் வருகின்றதா என்று பலரும் சரிவர கவனிப்பதில்லை ஆனால் அத்னை நீங்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தே மாதா மாதம் நம் மானிய தொகை சரியாக வந்துவிடுகின்றதா என்று ஆன்லைனில் சரிபார்த்துகொள்ளலாம். அதேபோல் மானிய தொகை வரவில்லை என்றால் அதற்க்கும் புகார் கொடுக்கலாம். எப்படி என்று பார்ப்போம் LPG Subsidy Status Check
சிலிண்டர் மானியம் நம் வங்கி கணக்கிற்க்கு வந்ததா இல்லையா என்று நாம் தெரிந்துகொள்வது எப்படி:- How to check LPG subsidy status online
முதலில் நீங்கள் http://mylpg.in/index.aspx என்ற வெப்சைட்டில் சென்று பாரத் கேஸ் ,ஹிந்துஸ்தான் கேஸ் அல்லது இண்டேன் கேஸ் என்று உள்ள படத்தில் நீங்கள் வீட்டிற்க்கு வாங்கும் கேஸ் நிறுவன கம்பெனியை கிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில் மேலே உள்ள new user என்பதை கிளிக் செய்து அதில் உங்கள் கேஸ் புக்கில் உள்ள உங்கள் LPG நம்பரை பதிவிட்டு, நீங்கள் சிலிண்டர் வாங்கும் கம்பெனி உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும்.
அடுத்து அதில் சிலிண்டருக்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரையும் கொடுக்க வேண்டும். மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி எண்ணைப் பதிவிட்டு, கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட்டு ‘proceed’ என்பதை கொடுக்க வேண்டும்.
அடுத்து அதில் உங்களது ஈமெயில் ஐடி கொடுத்து பாஸ்வர்டு உருவாக்க வேண்டும். பின்னர் உங்களது ஈமெயில் ஐடிக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும். அதை கிளிக் செய்தால் உங்களது கணக்கு ஆக்டிவேட் ஆகிவிடும்.
மீண்டும் அந்த வெப்சைட்டில் லாகின் செய்து View Cylinder Booking History/subsidy transferred’ என்பதை கிளிக் செய்தால் உங்களது மானியம் தொடர்பான விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.
ஒருவேளை உங்களுக்கு சிலிண்டர் மானியம் வராமல் இருந்தாலோ வேறு ஏதேனும் புகார்கள் இருந்தாலோ 18002333555 என்ற டோல் பிரீ நம்பரை அழைத்து புகார் கொடுக்கலாம்.
இதுவரை நீங்கள் உங்கள் சிலிண்டருக்குண்டான மானியதொகை பெறவில்லை என்றால் சிலிண்டர் கனெக்ஷன் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் ஆதார்கார்டு, மற்றும் வங்கி கணக்கு புத்த்கம் இரண்டையும் உங்கள் கேஸ் கம்பெனிக்கு எடுத்து சென்று விண்ணப்பியுங்கள். How can check my gas subsidy