mobile fell in boiling oil and exploded சமைக்கும்போது கொதிக்கும் எண்ணெயில் தவறிவிழுந்த மொபைல் வெடித்ததில் ஒருவர் பலி

சமைக்கும்போது கொதிக்கும் எண்ணெயில் தவறிவிழுந்த மொபைல் வெடித்ததில் ஒருவர் பலி
மத்திய பிரதேச மாநிலம் பிண்ட் மாவட்டத்தில் லஹார் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ். இவருக்கு மனைவி மற்றும் 14 வயதில் ஒரு மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். இன்நிலையில் விடுமுறை நாள் என்பதால் அவர் தன் மொபைல் போன் பார்த்தபடி சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது சந்திர பிரகாஷ் கையில் இருந்த மொபைல் போன் , கொதிக்கும் எண்ணெய் பாத்திரத்தில் தவறி விழுந்தது.

இதனால் மொபைல் போனில் இருந்த பேட்டரி வெடித்து, தீப்பற்றியது இதில் சந்திர பிரகாஷ் கடுமையான தீக்காயங்களை அடைந்தார்.
உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சிந்து ஆற்றின் குறுகலான பாலத்தில் போக்குவரத்து நெரிசலை அதிகமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் செல்ல தாமதப்படுத்தியது, இதன் விளைவாக வழியிலேயே சந்திர பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்