IMPORTANT NEWSTamilNadu News

namma salai app review in tamil ரோடு சரியில்லையா, புகார் அளிக்க வந்துவிட்டது ஆப், தமிழக அரசு அறிமுகம்

namma salai நம்ம சாலை ஆப்பில் புகார் அளிப்பது எப்படி

சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் கைபேசி செயலியை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களின் தலைமையில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (1.11.2023), சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், பள்ளங்களற்ற சாலை என்ற இலக்கை அடைய சாலையில் ஏற்படும் பள்ளங்களை பொது மக்களின் துணையோடு கண்டறிந்து, குறித்த காலத்தில் செப்பனிடும் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட இணையத்தின் அடிப்படையிலான “நம்ம சாலை” என்ற புதிய மென்பொருள் மற்றும் கைபேசி செயலியை தொடங்கி வைத்தார்.

நம்ம சாலை ஆப்பில் புகார் அளிப்பது எப்படி
நம்ம சாலை ஆப்பில் புகார் அளிப்பது எப்படி

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியான சாலை உள்கட்டமைப்பு அவசியம். கிராமப்புற பொருளாதாரத்தினை மேம்படுத்திடவும், புதிய வாழ்வாதார வாய்ப்புகளைத் உருவாக்கவும், சந்தைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை அணுகுவதை எளிதாக்குவதில் சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தரமான மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பினை, உருவாக்கி, பராமரித்து வருகிறது தமிழ்நாடு “விபத்தில்லா மாநிலம்” என்ற மாண்புமிகு முதலமைச்சரின் தொலைநோக்குத் திட்டத்தினை செயல்படுத்த, “பள்ளங்களற்ற சாலை” என்ற இலக்கினை அடைவற்கு ஏதுவாக, பொதுமக்களின் துணையோடு கண்டறியப்படும் சாலையில் ஏற்படும் பள்ளங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரிசெய்யப்பட வேண்டும் என்பதால், 2023- 24 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது, பிரத்தேயக கைபேசி செயலி உருவாக்கப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில், இணையத்தின் அடிப்படையிலான “நம்ம சாலை” என்ற மென்பொருள் மற்றும் கைபேசி செயலி உருவாக்கப்பட்டு, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

நம்ம சாலை ஆப்பில் புகார் அளிப்பது எப்படி

இச்செயலியின் மூலம், நெடுஞ்சாலைத்துறையினால் பராமரிக்கப்படும் சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் குறித்து பொதுமக்கள் கைபேசி செயலி வாயிலாக, புவி குறியீட்டுடன் கூடிய புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் அச்சாலைக்குரிய பொறியாளருக்கு செயலி வாயிலாக தெரிவிக்கப்பட்டு, குறித்த காலக்கெடுவுக்குள் பள்ளங்களை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு, சரி செய்யப்பட்ட விவரம், சாலையின் புகைப்படங்களுடன், “நம்ம சாலை” செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, புகார் அளிக்கும் பொதுமக்களின் அலைபேசிக்கு அனுப்பப்படும். அதன்படி சாலையில் ஏற்படும் பள்ளங்கள் உடனுக்குடன் சீர் செய்யப்படுவது மட்டுமல்லாமல், தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்படும். இச்செயலி மூலம் பள்ளங்கள் குறித்து தெரிவிப்பதுடன் மட்டுமில்லாமல், பேரிடர் காலங்களில் மரம் விழுதல், வெள்ளப்பெருக்கு போன்றவற்றைக் குறித்தும் புகார்கள் அளிக்க ஏதுவாக இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட, அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு நெருக்கமான பயனர் குழு (CUG) முறையில் நிரந்தர அலைபேசி எண், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் உள்ள 45 கோட்ட பொறியாளர்கள், 192 உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் 274 உதவி பொறியாளர்களுக்கும் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் “நிரந்தர தொலைபேசி எண்” வழங்கப்பட்டது.

ரோடு சரியில்லையா நம்ம சாலை ஆப்
ரோடு சரியில்லையா நம்ம சாலை ஆப்

மேலும், இவ்விழாவில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் இரு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலைகளான, ரூ.204.70 கோடி மதிப்பீட்டில் மேலூர் திருப்பத்தூர் சாலை, ரூ.198.65 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் மன்னார்குடி சாலை, ரூ.219.47 கோடி மதிப்பீட்டில் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலைகளை சாலை ஆகிய மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

மேலூர் திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூர் நகர் – புறவழிச்சாலையில் 63 குறு மற்றும் 4 சிறு பாலங்களும், தஞ்சாவூர் மன்னார்குடி சாலையில் 44 குறு மற்றும் 4 சிறு – பாலங்களும், விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலை, – மங்களம்பேட்டை நகர் புறவழிச்சாலையில் 46 குறு மற்றும் 8 சிறு பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்படி சாலைகளில், சாலைப் பாதுகாப்பினை உறுதிசெய்ய தெருவிளக்குகள் மற்றும் சூரிய மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக பேருந்து நிறுத்தங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டதாலும் மங்கலம்பேட்டை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதாலும் கனரக வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரம் குறைந்து,

namma salai app

விருத்தாசலத்தில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு கனரக வாகனங்கள் வந்து செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

விருத்தாசலம் நகரில் அமைந்துள்ள பீங்கான் தொழிற்சாலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நகர்வு செய்ய போக்குவரத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு. பிரதீப் யாதவ், இ.ஆ.ப., தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் திரு. எஸ்.பிரபாகர், இ.ஆ.ப., நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர், தலைமை பொறியாளர்கள், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நம்ம சாலை ஆப் டவுன்லோடு செய்ய:-

https://play.google.com/store/apps/details?id=com.nammasaalai&hl=en_US

Related Articles

Back to top button