neet syllabus pdf குறைக்கபட்ட பாடதிட்டம் நீட் தேர்வு சிலபஸ் வெளியீடு
NEET Syllabus 2024 PDF நீட் தேர்வு சிலபஸ் டவுன்லோடு செய்ய
நீட் தேர்வு என்றால் என்ன:-
நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.
நீங்கள் பொதுவாக மருத்துவப் படிப்பு (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிக்க நீட் தேர்வு அவசியம் ஆகும் இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு படித்தாலும் நீட் தேர்வு கட்டாயமாகும், மேலும் நீட் தேர்வை National Testing Agency நடத்தி வருகின்றது. நீட் தேர்வுக்கு 11, 12 ம் வகுப்பு களில் இருந்து இயற்பியல் வேதியியல் உயிர் அறிவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கு நடைபெறும்

குறைக்கப்பட்ட பாடதிட்டம்:-
இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வின் பாடத் திட்டத்தினை குறைத்து தேர்வு முகமை தற்போது அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கடந்த கொரோனா காலகட்டத்தில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் சிபிஎஸ்சி பள்ளிகளில் பயின்று தேர்வுகளை எழுதினர். இந்நிலையில், நீட் தேர்வு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் பாடத்திட்டத்தை குறைத்து உள்ளது National Testing Agency நீட் தேர்வுக்கான சிலபஸ் nta.ac.in. எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. NEET UG பாடத்திட்டம் 2024 இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றிலிருந்து தலைப்புகளை உள்ளடக்கியது, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உள்ள முக்கியமான தலைப்புகளில் இருந்து பெரும்பகுதியைக் கொண்டுள்ளது.

நீட் மதிப்பெண்கள்:-
பாடத்திட்டம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது: இயற்பியல் – 45 கேள்விகள் வேதியியல் – 45 கேள்விகள் உயிரியல் – 90 கேள்விகள் (தாவரவியலில் 45 + விலங்கியல் 45) தேர்வில் கேட்கப்படும் மொத்த கேள்விகளின் எண்ணிக்கை 200, அதில் 180 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்களும், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும்.
நீட் சிலபஸ் டவுன்லோடு செய்ய:-
DOWNLOAD NEET Syllabus 2024 PDF CLICK HERE
https://nta.ac.in/Download/Notice/Notice_20231122154404.pdf
நீட் தேர்வு:-
அடுத்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு 2024 மே 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் 2024 ஜூன் 2-ஆவது வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.