IMPORTANT NEWS

nps vatsalya scheme 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான NPS வாத்சல்யா ஓய்வூதிய திட்டம் 

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான NPS வாத்சல்யா ஓய்வூதிய திட்டம் 

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் புதிய திட்டம் குழந்தைகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் என்பிஎஸ் வாத்சல்யா. இந்த திட்டத்தை சென்னையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

nps vatsalya scheme
nps vatsalya scheme

NPS வாத்சல்யா திட்டம்:

மத்திய அரசு தற்போது NPS வாத்சல்யா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குழந்தைகளுக்கான ஒரு ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ஆயிரூரம் பாய் வரை முதலீடு செய்யலாம்.அதிகபட்ச வரம்பு கிடையாது என்பதால் குழந்தைகளின் பெயரில் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு:

குழந்தை பிறந்தவுடன் இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.50,000 செலுத்தினால் அந்த குழந்தைக்கு 18 வயதாகும் போது ரூ.25 லட்சம் கிடைக்கும்.

குழந்தைகளின் கல்வி, குறிப்பிட்ட நோய் மற்றும் இயலாமைக்கு 3 வருட லாக்-இன் காலத்திற்குப் பிறகு முதலீட்டு தொகையில் 25% வரை திரும்பப் பெறலாம். அதிகபட்சம் மூன்று முறை பணம் எடுத்துக்கொள்ளலாம்

18 வயது நிரம்பியவுடன் இத்திட்டத்திலிருந்து வெளியேறிக் கொள்ளவோ அல்லது தொடர்ந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கோ அனுமதி அளிக்கப்படும்.

nps vatsalya scheme
nps vatsalya scheme

 

இந்தத் திட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்புக்காக ஓய்வூதியக் கணக்கில் பணத்தை சேமித்து வரலாம்.

இது ஒரு பென்ஷன் திட்டம் என்பதால் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி முதலீடு செய்யலாம்

இந்தத் திட்டத்துக்கான பிரத்யேக தளத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிமுகம் செய்தார்.

இந்தத் திட்டக் கணக்குகளை வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் உள்ளிட்ட அமைப்புகள் வாயிலாகவும், e-NPS என்ற இணையதளம் வாயிலாகவும் தொடங்கலாம்.

nps vatsalya scheme

Related Articles

Back to top button