IMPORTANT NEWSTamilNadu News

old age pension scheme tamil nadu apply online 2024 முதியோர் உதவிதொகை ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி? முழு விவரம்

OLD AGE PENSION APPLY ONLINE IN TAMIL முதியோர் பென்சன் ரூபாய் 1,000 விண்ணப்பிப்பது எப்படி

old age pension scheme tamil nadu apply online முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதும் அதற்கு மேலும் வயது முதிர்ந்த ஆதரவற்ற ஆண் / பெண் ஆகிய இருவரும் விண்ணப்பிக்கலாம். 60 வயது முதல் 79 வயது வரையிலான பயனர்களுக்கு மத்திய அரசு ரூ.200, மாநில அரசு, ரூ.800 என்ற விகிதாச்சாரத்தில் 1000 ரூபாயை வழங்கி வருகிறது.

அதேபோன்று, 80 மற்றும் அதற்கு மேல் உள்ள பயனாளிகளுக்கு மத்திய அரசு ரூ.500ம், மாநில அரசு ரூ.500 என்ற விகிதாச்சாரத்தில் ரூ.1000 வழங்கி வருகிறது. ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம். முதியோர் பென்ஷன் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்? மொத்தம் ஜந்து நிலைதான் நீங்கள் விண்ணப்பிக்க

தேவையான ஆவணங்கள்:-

விண்ணப்பதாரரின் புகைப்படம்

குடும்ப அட்டை

ஆதார் அட்டை

பேங்க் புத்தகம்

old age pension scheme tamil nadu apply online
old age pension scheme tamil nadu apply online

விண்ணப்பிப்பது எப்படி?

முதல் நிலை முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx அதில் Citizen Login என்பதை க்ளிக் செய்யவும். ஏற்கனவே account இருப்பவர்கள் user name password கொடுத்து என்டர் செய்யவும்.Captcha Code என்பதில் சரியானவற்றை கொடுத்து லாகின் செய்யவும் அக்கவுண்ட் இல்லாதவர்கள் புதிதாக Account ஓபன் செய்யவும். அதில் new user? sign up என்ற ஆப்ஷனில் புதிதாக அக்கௌன்ட் ஓபன் செய்யலாம். அக்கவுன் ஓப்பன் செய்து லாகின் செய்து அதில் Revenue Department என்பதை செய்யவும். அதில் old age pension என்பதை தேர்வு செய்து Proceed என்பதை க்ளிக் செய்யவும்.

இரண்டாம் நிலை அடுத்து அதில் Register can என்பதை க்ளிக் செய்யவும். அடுத்து அவரும் விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, உறவு முறை, தந்தை/ தாய் பெயர், மதம், கல்வி தகுதி, சாதி, வட்டம், மாவட்டம், கிராமம், நிரந்தர வீட்டு முகவரி, மொபைல் எண் கொடுத்து Generate OTP என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்னை கொடுத்து ரெஜிஸ்டர் என்பதை க்ளிக் செய்யுங்கள் அடுத்து உங்களுக்கு can நம்பர் ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து விவரங்களை குறிப்பிட்ட பிறகு search ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி அனைத்தும் வ்ரும் அடுத்து அதில் Proceed என்பதை க்ளிக் செய்யவும். அடுத்து உங்களுடைய மொபைல் எண் வரும். அருகில் இருக்கும் generate otp என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு வரும் ஒடிபியை கொடுத்து conform OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அடுத்து கீழே proceed என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

மூன்றாம் நிலை அடுத்து வரும் படிவத்தில் அடுத்து mode of disbursement என்பதில் bank / postal மூலம் தேர்வு செய்து உங்கள் வங்கி விவரங்களை குறிப்பிடவும் அடுத்து கேட்கபட்டுள்ள விவரங்களினை சரியாக பூர்த்தி செய்து கொண்டு submit ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

நான்காம் நிலை அடுத்து உங்களுடைய ஆவணங்களை அப்லோட் செய்யும் ஆப்ஷன் வரும். அதில் கேட்கபட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் அப்லோடு செய்யுங்கள் அதில் Self Declaration Form , Download Aadhar Consent Form டவுன்லோடு செய்து கையொப்பம் இட்டு மீண்டும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்யவேண்டும் அதற்கு Download Self Declaration Form என்பதை க்ளிக் செய்யவும் ட்வுன்லோடு ஆகும். அவற்றில் உங்களுடைய கையெழுத்து போட வேண்டும்.

ஜந்தாம் நிலை ஆவணங்கள் அப்லோட் செய்த பிறகு Make payment என்பதை கொடுக்க வேண்டும். அதில் நெட் பேங்கிங் , யூபிஜ , டெபிட் கார்டு போன்றவைகள் ஏதேனும் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணத்தினை செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு ஒப்புகை சீட்டு வரும். அவ்வளவுதான் அடுத்து உங்களுக்கு வந்த ஒப்புகை சீட்டை எடுத்து கொண்டு உங்கள் பகுதி விஏஓ, மற்றும் ஆர்.ஜ சரிபார்ப்பு முடிந்து தாசில்தார் ஒப்புகை கொடுத்தபின்பு அடுத்த மாதம் முதல் உங்கள் வங்கியில் முதியோர் பென்ஷன் வரும் அவ்வளவுதான்

old age pension scheme tamil nadu apply online

விண்ணப்பிக்க CLICK HERE

https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx

Related Articles

Back to top button