open book examinations for students புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்.. மாணவர்களுக்கு செம்ம குஷி
open book examinations for students புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்.. மாணவர்களுக்கு செம்ம குஷி
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் பரிந்துரைகளுடன் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வுகளை எழுதும் முறை (OBE) செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் புத்தகத்தை பார்த்து தேர்வுகளை எழுதும் முறையும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் போன்றவற்றையும் தேர்வுசெய்ய வாரியம் திட்டமிட்டுள்ளதாக ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த நடைமுறை மாணவர்களின் நினைவாற்றலை மதிப்பிடாமல் பாடத்தின் மீதான அவர்களது புரிதல் திறனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.