perungalathur crocodile video பெருங்களத்தூரில் சுற்றித்திரிந்த முதலை பிடிபட்டது!
பெருங்களத்தூரில் முதலையை பிடித்த வனத்துறையினர்
perungalathur crocodile video மிக்ஜாம் புயலின் போது பெய்த கன மழை காரணமாக சுமார் 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று பெருங்களத்தூர் நெடுங்குன்றம் பகுதியில் சாலையை கடந்து சென்றது. இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரல் ஆனது

இந்நிலையில் ஆலப்பபாக்கத்தில் உள்ள சதானந்தபுரம் அருகே உள்ள ஜி கே எம் கல்லூரி செல்லும் சாலையில் பொதுமக்கள் ஒரு முதலையை இன்று பார்த்தனர். உடனடியாக தாம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் வந்து முதலையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறையினர் போராடி அந்த முதலையை பிடித்தனர் பிடிபட்ட அந்த முதலையை கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள முதலை பண்ணைக்கு கொண்டு சென்றனர்.
perungalathur crocodile video
Breaking news 🅾️
சென்னை வெள்ளத்தின் போது தப்பி வந்த சதுப்பு நில சைவ முதலை பிடிபட்டது.. pic.twitter.com/o6bnhzainE
— நெல்லை செல்வின் (@selvinnellai87) December 13, 2023