Police drives staff on bonnet பெட்ரோலுக்கு பணம் கேட்ட பங்க் ஊழியரை 1KM இழுத்துச் சென்ற காவலர் வைரல் சிசிடிவி காட்சி

பெட்ரோலுக்கு பணம் கேட்ட பங்க் ஊழியரை 1KM இழுத்துச் சென்ற காவலர் வைரல் சிசிடிவி காட்சி
கேரளாவில் கண்ணூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் கே.சந்தோஷ் குமார் என்பவர் தனது காரில் பெட்ரோல் நிரப்பிய பிறகு முழுப் பணத்தையும் தர மறுத்துள்ளார்

இதனை தொடர்ந்து.சந்தோஷ் குமாரை வெளியேற விடாமல் அனில் என்ற பெட்ரோல் பங்க் ஊழியர் தடுக்க முயன்றபோது, சந்தோஷ் குமார் காரை இயக்கி முன்னோக்கி ஓட்டிச் சென்றார், இதில் தடுமாரி அனில் பானெட்டின் மீது விழுந்தார். அப்போது, அனிலை பானெட்டின் மீது ஏற்றி பரபரப்பான தேசிய நெடுஞ்சாலையில், ஒரு கிலோ மீட்டர் தூரம் காரை சந்தோஷ்குமார் ஓட்டிச் சென்றுள்ளார்.இந்த சம்பவம் அங்குள்ள கேமராவில் பதிவாகி வைரலானது.
இதில் கைகளில் காயம் அடைந்த அனில், டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரை விசாரித்த போலீஸ் தரப்பு காரை ஓட்டியது கண்ணூர் போலீஸ் மெஸ் கிரேடு IAS கே.சந்தோஷ் குமார் என்பது தெரிய வந்தது
இதனை தொடர்ந்து IAS சந்தோஷ்குமார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்ணூர் நகர போலீஸ் கமிஷனர் அஜித்குமார் உறுதி செய்துள்ளார்.
பரபர்ப்பான சிசிடிவி காட்சி பார்கக:
Police drives staff on bonnet
பெட்ரோலுக்கு பணம் கேட்ட பங்க் ஊழியரை 1KM இழுத்துச் சென்ற காவலர் வைரல் சிசிடிவி காட்சி