IMPORTANT NEWSNATIONAL NEWS

Sabarimala Online Booking Darshan சபரிமலை தரிசனம் ஆன்லைன் புக்கிங் செய்வது எப்படி

Sabarimala Online Booking Darshan Ticket 2023 மொபைலில் சபரிமலை தரிசனம் ஆன்லைன் புக்கிங் செய்வது எப்படி

Sabarimala online ticket Booking 2023

சபரிமலை ஐயப்பன் கோவில் sabarimala ayyappa temple ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இக்கோவிலில் தரிசனம் செய்ய தற்போது முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஆன்லைன் புக்கிங் இணையதளத்தில் உங்கள் விபரங்களை பதிவேற்றம் செய்து, ‘போட்டோ அப்லோடு’ செய்து முன்பதிவு செய்யலாம்.

Sabarimala Online Booking Darshan Ticket 2023
Sabarimala Online Booking Darshan Ticket 2023

sabarimala online booking முன்பதிவு செய்வது எப்படி?

சபரிமலை அதிகாரபூர்வ இணையதளத்திற்க்கு சென்று Register  பகுதியில் உங்கள் பெயர், முகவரி பிறந்ததேதி விவரம், மொபைல் எண் , அடுத்து உங்கள் புகைப்படத்தை அப்லோடு செய்து கொள்ளுங்கள், அதன்பின்பு அதில் உங்கள் ஆதார்கார்டையும் அப்லோடு செய்து கொள்ளுங்கள், இமெயில் முகவரி, பாஸ்வேர்ட் கொடுத்து கேப்சாவை. உள்ளிட்டு submit பட்டனை அழுத்துங்கள்.

அடுத்து உங்கள் இமெயில் முகவரிக்கு ஆக்டிவேசன் லின்க் மற்றும் ஆக்டிவேசன் கோட்அனுப்பி வைக்கப்படும். அந்த லின்க் ஐ க்ளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.

அடுத்து இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் லாக் இன் செய்யுங்கள்.

அடுத்து நீங்கள் Search Availability என்ற பகுதியில் தங்களுடன் எத்தனை நபர்கள் தரிசிக்க உள்ளனர் என்ற விவரத்தையும் எந்த மாதத்தில் எந்த தேதியில் தரிசிக்க உள்ளீர் என்பதை செலக்ட் செய்து Search பட்டனைஅழுத்துங்கள்.

நீங்கள் தேதியை தேர்ந்தெடுத்தவுடன் அந்த தேதியில் உள்ள தரிசன நேரததை காண்பிக்கும். உங்களுக்கு தேவையான நேரத்தை தேரந்தெடுத்து அதன் அருகில் உள்ள Book Now பட்டனை அழுத்துங்கள், அடுத்தாக தற்போது கேப்சாவை உள்ளிட்டு Confim My Bboking பட்டனை அழுத்துங்கள்.

குழுவாக புக் செய்யும் போது ‘Add Pilgrim’ எனும் ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும். அதில் அந்த புதிய பக்தரின் புகைப்படம், பெயர், விலாசம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை விவரங்களை உள்ளிட வேண்டும்.

அவ்வளவுதான் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தரிசன விவரம் அடங்கிய VirtrualQ டிக்கெட் புகைப்படத்துடன் வரும்.அதை நீங்கள் டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு செல்லலாம்.

Sabarimala Q Online Booking

முன்பதிவு செய்வது எப்படி:- என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யவும்

 

Related Articles

Back to top button