sudden heart attack for driver தன் உயிர் போகும் தருவாயிலும் மற்ற உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் முழு விவரம்

sudden heart attack for driver தன் உயிர் போகும் தருவாயிலும் மற்ற உயிரை காப்பாற்றிய ஓட்டுநர் முழு விவரம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் பகுதியை சேர்ந்த மலையப்பன் ஒரு தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக உள்ளார்.இவர் பள்ளி வாகனம் ஒட்டும்போது திடிர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது மிகவும் சிரமப்பட்டு பள்ளி வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டீரிங்கின் மீது மயங்கி சரிந்துள்ளார்
மலையப்பனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பள்ளி வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பள்ளி வாகனத்தை, சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி சமயோசிதமாகச் செயல்பட்டு மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர் மலையப்பனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த திரு. மலையப்பன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.