teacher beat student brutally நாவல் பழம் பறித்து தர மறுத்த 4ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை

teacher beat student brutally நாவல் பழம் பறித்து தர மறுத்த 4ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை
உத்தரப்பிரதேச மாநிலம், பிஹாரிபூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் போத்திரம்,பன்வதி. இவர்களது 9வயது மகன் பரேலியில் உள்ள ஒரு அரசு ஆரம்ப பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 20ம் தேதி அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த சிருவன் உடம்பில் காயங்களுடன் வந்துள்ளான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனிடம் விசாரித்த போது ஆசிரியை ராணி கங்வார் மரத்தில் ஏறி நாவல் பழங்களை பறிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு சிறுவன் மறுத்ததால், வகுப்பறைக்குள் வைத்து கிட்டத்தட்ட 2 மணி தாக்கியதாக அழுதுக்கொண்டே கூறினான்

இதனை தொடர்ந்து சிறுவனின் தாய் பன்வதி காவல்துறையில் ஆசிரியை மீது புகார் அளித்துள்ளார்.மேலும் புகாரின் பெயரில் சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆசிரியை ராணி கங்வார் மீது FIR பதிவு செய்யபட்டு,குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது