tirupati darshan ticket மே மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் முன்பதிவு செய்யனுமா முழு விவரம்

tirupati darshan ticket மே மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் முன்பதிவு செய்யனுமா முழு விவரம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் மே மாத தரிசனத்துக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு பிப்ரவரி 24 ம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஊஞ்சல் சேவை, டோலோற்சவம், திருப்பாவாடை, அபிஷேகம், அஷ்டதல பாத பத்மராதன சேவை ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கட்டண சேவைகளுக்கும் முன்பதிவு செய்யலாம்.
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
அதன்படி மே மாதத்திற்கான ரூ.300 தரிசனம் டிக்கெட்கள் ஆன்லைனில் பிப்ரவரி 24 அன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. 300 ரூபாய் டிக்கெட் பெற பக்தர்கள் https://tirupathibalaji.ap.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் TTDevasthanams என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியிலும் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மே மாதம் ஏழுமலையானை வழிபட ஸ்ரீவாரி சிறப்பு 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் கோட்டா வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளது
குறிப்பு:-
https://tirupatibalaji.ap.gov.in எனும் அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் மட்டுமே புக் செய்து கொள்ளலாம்.போலி வெப்சைட்டில் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி வருகிறது
