IMPORTANT NEWS

vijay makkal iyakkam அரசியல் கட்சியாக பதிவு செய்ய நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்…

vijay makkal iyakkam நடிகர் விஜய்.சமீபத்தில் வெளியான லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் GOAT என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் போதிலும் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார்.

மக்கள் நலத்திட்ட உதவிகளும் செய்து வருகிறார். இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.’ இந்நிலையில், விஜய்மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய், நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

அப்போது பூத் கமிட்டிகளை வலுப்படுத்த மக்கள் இயக்கத்தினருக்கு அறிவுறுத்தி உள்ளார். இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். தேர்தலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும், எனவும் விரைவில் விஜய் மக்கள்இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்றம் செய்து நடிகர் விஜயை தலைவராக அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் பிப்ரவரி 4-ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

vijay makkal iyakkam
vijay makkal iyakkam

vijay makkal iyakkam

official website 

Related Articles

Back to top button