voter id correction online வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி முழு விவரங்கள் ஸ்டெப் பை ஸ்டெப்
how to apply for voter id card online tamilnadu வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்வது எப்படி
வாக்காளர் அட்டை திருத்தம் செய்வது எப்படி உங்கள் வாக்களர் அட்டையில் உங்கள் விவரங்கள் தவறாக உள்ளதா பெயர் பிறந்த தேதி ,மாதம், வருடம் தந்தை பெயர் முகவரி போட்டோ ஆகியன தவறாக இருந்தால் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் திருத்தம் செய்யலாம்
ஆன்லைன் மூலம் திருத்தம் செய்ய வந்துவிட்டது தேர்தல் ஆணையத்தின் புதிய ஆப்
ஆப் இன்ஸ்டால் செய்ய https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen
முதலில் தேர்தல் ஆணைய அதிகாரபூர்வ ஆப் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் அடுத்து அதில் உங்கள் மொபைல் எண் கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள் அடுத்து அதில் உங்களுக்கு என்ன சேவை தேவைப்படுகிறதோ அதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து சரியாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பத்து இலக்க எண் தரப்படும். அதனை குறித்து வைத்து கொள்ளுங்கள், விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் திருத்தம் செய்த வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
ஆன்லைனில் தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் திருத்தம் செய்ய:-
முதலில் மேல் உள்ள லின்ங் கிளிக் செய்துக்கொள்ளுங்கள்
அடுத்து அதில் லாகின் என்பதை கிளிக் செய்து ஜடி பாஸ்வேர்டு போட்டு உள் நுழையுங்கள் ஜடி பாஸ்வேர்டு இல்லாதவர்கள் புதியாத ரிஜிஸ்டர் செய்து ஜடி பாஸ்வேர்டு கிரியேட் செய்யுங்கள்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நீங்கள் ஆன்லைனில் படிவம் 8 ஐ நிரப்ப வேண்டும், வாக்காளர் பட்டியலில் அச்சிடப்பட்டுள்ள அவரது விவரங்களில் வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய, ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நபர் மட்டுமே படிவம்-8ஐ நிரப்ப முடியும் .
அடுத்து லாகின் செய்து உள் நுழையுங்கள் அதில் படிவம் 8 செலக்ட் செய்து சப்மிட் கொடுங்கள் அடுத்து அதில் உங்கள் வாக்காளர் அட்டையின் எண் பதிவிடுங்கள்
அடுத்து அதில் என்ன தவறாக உள்ளது எதை மாற்றவேண்டுமோ அதனை செலக்ட் செய்து திருத்தி கொள்ளுங்கள் அடுத்து தேவையான சான்றிதழ் அப்லோடு செய்யுங்கள் அதன்பின்பு சப்மிட் கொடுத்து விடுங்கள் அவ்வளவு தான்