wayanad bailey bridge வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க இந்திய ராணுவம் 36 மணிநேரத்தில் கட்டிய பெய்லி பாலம் வீடியோ
190 அடி நீள தற்காலிக பெய்லி பாலம் வீடியோ பார்க்க
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க இந்திய ராணுவம் 36 மணிநேரத்தில் கட்டிய பெய்லி பாலம் வீடியோ
கேரளா வயநாடு சூரல்மலையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக கட்டப்பட்டு வந்த பெய்லி பாலத்தை வெற்றிகரமாக கட்டிமுடித்த இந்திய ராணுவத்தினர்!
வயநாடு நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்த மேப்பாடி மற்றும் சூரல்மலை நகரை இணைக்கும் இருவாழஞ்சு ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதாலும், இதனை அடுத்து, இந்திய ராணுவத்தின் பிரிகேடியர் அர்ஜுன் செகன் தலைமையிலான குழுவினர், 90 டன் எடை வரை தாங்கக்கூடிய 190 அடி நீள தற்காலிக பெய்லி பாலத்தை கட்டும் பணியை நிறைவு செய்துள்ளது.ஜேசிபி மற்றும் பிற அதிநவீன இயந்திரங்கள் மூலம் இந்தப் பெய்லி பாலம் 36 மணிநேரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
350 பேர் கொண்ட ராணுவக் குழு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்கள் ஆற்றின் மறுபுறம் சென்று வரவும் இந்த பாலம் உதவியாக இருக்கும்.
முண்டக்கை பகுதியில் ஏராளமானோர் மண்ணில் புதைந்து உள்ளவர்களின் உடலை மீட்கவும், உயிருடன் உள்ளவர்களை ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக அழைத்து வரவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கையின் பிரதான பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அந்த பகுதியில் மீட்பு பணி செல்ல முடியாத சூழல் நிலவியது தற்போது ஆற்றை ஜிப் கயிறு மூலம் கடந்து சென்றே மீட்புப் பணியில் ஈடுபடுவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த பாலத்தை விரைவாக அமைத்து மீட்புப் பணியை துரிதப்படுத்த முடிவு செய்யப்பட்டு இந்த பெய்லி பாலம் மிகவும் உருவாக்க்கப்பட்டுள்ளது.
பெய்லி பாலம் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பொறியாளர் சர் டொனால்ட் பெய்லியால் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே, இந்த பெய்லி பாலம் உத்தராகாண்ட், இமாச்சல் பகுதிகளில் ஏற்பட்ட பேரிடர் காலங்களில் இந்திய ராணுவத்தினரால் கட்டப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் விவரங்களுக்கு வீடியோ பார்க்க CLICK HERE
மேலும் விவரங்களுக்கு வீடியோ பார்க்க CLICK HERE