INTERNATIONAL NEWS

Angelo Mathews timed out video 140 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டைம்டு அவுட் ஆன ஏஞ்சலோ மேத்யூஸ் வீடியோ

Angelo Mathews timed out video கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை டைம்டு அவுட் ஆன ஏஞ்சலோ மேத்யூஸ்

வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம்டு அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.இதன்மூலம் 140 ஆண்டுகளுக்கும் மேலான உலக கிரிக்கெட் வரலாற்றில் டைம்டு அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் ஆகியுள்ளார் ஏஞ்சலோ மேத்யூஸ்

Angelo Mathews timed out video
Angelo Mathews timed out video

டைம்டு அவுட் என்றால் என்ன:-

கிரவுண்டில் இருந்து ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்த பின்பு அடுத்து வரக்கூடிய பேட்ஸ்மேன் ஐசிசியின் விதி எண் 40.1.1 படி 3 நிமிடங்களுக்குள் பேட்ஸ்மேன் கிரீஸுக்குள் வந்து அடுத்த பந்தை சந்திக்க வேண்டும்

உலகக் கோப்பை  போட்டியில் நேர வரம்பு இரண்டு நிமிடங்கள் மட்டுமே.”ஒரு விக்கெட் வீழ்ந்த பிறகு அல்லது ஒரு பேட்டர்  ஆட்டமிழந்த 2 நிமிடங்களுக்குள் அடுத்த பேட்டர் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். 

அப்படி வராதப்பட்சத்தில் நடுவர்கள் ‘டைம்டு அவுட்’ முறையில் அவுட் வழங்கலாம் மேலும் இந்த முறையிலான அவுட்டுக்கு பந்துவீச்சாளர்கள் யாருக்கும் எந்த கிரெடிட்டும் வழங்கப்படாது. மாறாக, ரன் அவுட் போல இந்த டைம்டு அவுட் வழங்கப்படும்.

வரலாற்றில் இதுவரை:-

140 ஆண்டு கிரிக்கெட் வரலாற்ரில் ஐசிசி வகுத்துள்ள இந்த டைம்டு அவுட் விதியில் இதுவரை யாரும் அவுட் ஆனதில்லை

நடந்து என்ன?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசஅணியும் இலங்கை அணியும் விளையாடியது, டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, போட்டியின் 24.1வது பந்தில் இலங்கை அணியின் மிடில் ஆர்டர் வீரர் சமரவிக்ரமா 41 ரன்களில் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்

அதன்பின்பு இலங்கையின் சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்க வந்தார். அப்போது அவரின் ஹெல்மட்டில் ஏதோ பிரச்சனை வந்தது. இதனால் நேராக க்ரீஸிற்குள் வராமல் மாற்று ஹெல்மட் கொண்டு வருவாறு அணியினருக்கு சிக்னல் கொடுத்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் அடுத்த பந்தை வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, வங்கதேச அணி கேப்டன் அவுட் கேட்டு முறையிட்டதால் டைம்டு அவுட் விதிகளின் படி நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். இதனையடுத்து மேத்யூஸ் விளக்கங்கள் கொடுத்தார் ஆனால் அவரது விளக்கத்தை ஏற்காத நடுவர்கள் அவுட் அவிட் தான் என கூறியதை அடுத்து எந்த பந்தையும் எதிர்கொள்ளாமல் ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். விரக்தியில் மேத்யூஸ் ஹெல்மெட்டை கீழே தூக்கி எறிந்தார். பின்னர் கடும் கோபத்துடனும் பெவிலியனை நோக்கி அவர் நடக்கத் தொடங்கினார்.

உலகக்கோப்பை வரலாற்றிலேயே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் மேத்யூஸ். இது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க:-

Related Articles

Back to top button