China Woman Leaves $2.8 Million கடைசி காலத்தில் கண்டு கொள்ளாத 3 பிள்ளைகள் ₹23 கோடி மதிப்பு சொத்துக்களை தான் வளக்கும் நாய் ,பூனைகளுக்கு உயில் எழுதிய பெண்!
China Woman Leaves $2.8 Million கடைசி காலத்தில் கண்டு கொள்ளாத 3 பிள்ளைகள் ₹23 கோடி மதிப்பு சொத்துக்களை தான் வளக்கும் நாய் ,பூனைகளுக்கு உயில் எழுதிய பெண்!
சீனாவின் ஷாங்காய் நகரில் தான் வளர்க்கும் பூனை மற்றும் நாய்களுக்கு ₹23 கோடி மதிப்பிலான சொத்துக்களை எழுதி வைத்துள்ளார் மூதாட்டி லியூ! தனது குழந்தைகள் 3 பேருக்கும் சொத்துக்களை கொடுப்பதாக உயில் எழுதி இருந்த நிலையில், தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, யாரும் தன்னை பார்க்க வராததால் விரக்தியில் இவ்வாறு செய்துள்ளார்

சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது 3 குழந்தைகளும் பங்கீடும் வகையில் உயில் எழுதி வைத்தார். ஆனால் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போது அவரது குழந்தைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. தான் வளர்த்த பிள்ளைகள் தன்னை புறக்கணித்ததால் கோபமடைந்த அவர் வேறு யாரும் இல்லாத நேரத்தில் விலங்குகள் தனக்காக இருப்பதாகக் கூறி, தனது சொத்து, சொத்துக்கள் மற்றும் பணத்தை தனது பூனைகள் மற்றும் நாய்களுக்கு உயில் எழுதி வைத்து விட்டார்.
இதையறிந்த அவரது பிள்ளைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவளுடைய புதிய உயில், அவளுடைய எல்லாப் பணத்தையும் அவளுடைய செல்லப் பிராணிகள் அல்லது அவர்கள் பெற்றிருக்கும் சந்ததிகளைப் பராமரிக்கப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறது. சீனாவில் உள்ள சட்டங்கள் லியு தனது பணத்தை நேரடியாக விலங்குகளுக்கு விட்டுச் செல்வதைத் தடுப்பதால், ஒரு உள்ளூர் கால்நடை மருத்துவமனை பரம்பரையின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளது.