INTERNATIONAL NEWS

google pay loan apply online Google Pay மூலம் கடன் வாங்குவது எப்படி

Google Pay மாத தவனையில் கூகுள் பேயில் கடன் வாங்குவது எப்படி

google pay loan apply online இந்தியாவில் 75% சில்லறை டிஜிட்டல் பேமெண்ட்டுகளை கையாளும் ஒரு வலுவான தளம் UPI ஆகும். UPI ஆனது சேமிப்புக் கணக்குகள், ஓவர் டிராஃப்ட் கணக்குகள், ப்ரீபெய்ட் வாலட்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் இணைக்க முடியும். தனிநபர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளை UPI உடன் இணைக்க RBI அனுமதித்துள்ளது. கூகுள் பே மற்றும் போன் பே மாதிரியான தளங்களில் இனி Pre – sanctioned credit line வசதியை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

google pay loan apply online
google pay loan apply online

அதாவது இந்த யுபிஐ அப்ளிகேஷன்களை இனி கிரெடிட் கார்டு போல பயன்படுத்தலாம். உங்களது வங்கிகள் உங்கள் தகுதிக்கேற்ப அதிகபட்ச தொகையை முன்கூட்டியே நிர்ணயிக்கும். அதன் பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் கூட யுபிஐ மூலம் கிரெடிட் தொகையினை செலவு செய்யலாம். UPI மூலம் வங்கிகளில் முன் அனுமதி பெற்ற கடன் வரிகளின் செயல்பாடு’ என்ற சுற்றறிக்கையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வசதியின் கீழ், தனிப்பட்ட வாடிக்கையாளரின் முன் அனுமதியுடன் தனிநபர்களுக்கு திட்டமிடப்பட்ட வணிக வங்கியால் வழங்கப்பட்ட முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன் மூலம் பணம் செலுத்துதல், UPI அமைப்பைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளுக்கு செயல்படுத்தப்படுகிறது” என்று RBI தெரிவித்துள்ளது இதனை அடுத்து gpay தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க sachet loan ஜ அறிமுகப்படுத்தியது அதன்படி மாதம் 111 தவனையில் கடன் பெறலாம் என அறிவித்தது

தற்பொழுது வங்கிகள் மூலமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தொகையை கடனாக பெற்று பயன்படுத்தி வருகின்றனர். அந்த கடனுக்கு வட்டியுடன். சேர்த்து அசல் தலையில் சிறிய பகுதியையும் அவர்கள் மாதம் மாதம் கட்டும் வகையில் வங்கிகள் கடன் அளித்து வருகின்றன. இந்நிலையில் உலகின் மிக பிரபலமான கூகுள் நிறுவனம் தற்போது புதிய கடன் சேவை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது கூகுள் பே செயலி மூலம் மிகவும் சிறிய அளவிலான தொகையை கடனாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.

குறித்த கடன் தொகையானது சாசெட் கடன்கள்(sachet) என அழைக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகள் ஏற்படும் பொது ஒவ்வொருவரிடமும் கடன் கேட்க முடியாது எனவேதான் சிறு வணிக முதலாளிகளுக்கு ரூபாய் 15000 வரை இந்த சிறு கடன் திட்டம் வழங்கப்படவுள்ளது. கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்களுக்கு ரூ.15,000 மதிப்பிலான தொகையை sachet loans என்ற சிறு கடனாக வழங்கும்.

கூகுள் பே-இன் இந்த Sachet Loan பெடரல், கோடக் மஹிந்திரா, HDFC வங்கி மற்றும் ICICI ஆகிய நான்கு வங்கிகளுடன் கூகுள் கூட்டுச் சேர்ந்துள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது

இந்த கடன் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில் இந்த கடன் தொகையை வெறும் 111 ருபாய் என்ற சிறிய தொகையில் திருப்பி செலுத்தலாம் . இந்த திட்டத்தினை இ பே லேட்டேர் (ePayLater)உடன் இணைந்து கூகுள் பே(google pay) வாயிலாக செயல்படுத்த உள்ளது. சாக்கெட் லோன்(Sachet Loan) என்ற திட்டத்தில் இந்த வகையில் வணிகர்கள், பயனர்கள் அனைவரும் 15000 ரூபாய் முதல் 100000 லட்சம் ரூபாய் வரை லோன் பெறலாம்.

Google Pay மூலம் கடன் வாங்குவது எப்படி:-

முதலில் Google Pay for Business என்பதை உங்கள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யவும்

அடுத்து Google Pay for Business என்பதை லாகின் செய்யவும் அடுத்து google Pay for Business செயலியின் கடன் பகுதிக்குச் சென்று ஆஃபர்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்

அதன்பிறகு உங்களுக்குத் தேவைப்படும் கடன் தொகையை உள்ளிட்டு அதன்பின்பு தொடரவும். அதன்பின்பு அதில் KYC விவரங்கள் பதிவு செய்து விட்டால் உங்களுக்குக் கடன் கிடைக்கும்.

வங்கிகளைப் போல கடுமையான டாகுமெண்ட் சரிபார்ப்பு போன்றவை இல்லாமல் விரைவில் கடன் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

google pay loan apply online

Related Articles

Back to top button