King Charles III diagnosed with cancer இங்கிலாந்து மன்னர் சார்லஸ்-க்கு புற்றுநோய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
King Charles III diagnosed with cancerஇங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் ஏற்கெனவே புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லண்டன் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தனது புரோஸ்டேட் சிகிச்சை குறித்தும் மன்னர் சார்லஸ் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார். இந்தநிலையில் தற்போது அவருக்கு இன்னொரு வகை புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய சிகிச்சையின்போது தான் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

என்று அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மன்னர் சார்லஸ் தனது சிகிச்சை குறித்து முற்றிலும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூடிய விரைவில் முழுமையான பணிக்குத் திரும்புவார்’ என்றும் பக்கிங்காம் அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 75 வயதான மன்னர் சார்லஸ் நேற்று காலை நோர்போக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாமில் இருந்து லண்டன் திரும்பினார்.தங்கள் மன்னருக்கு புற்றுநோய் என்ற செய்தி இங்கிலாந்து மக்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.
King Charles III diagnosed with cancer
More Details Click Here
