mermaid papua new guinea பப்புவா நியூ கினியா பசிபிக் கடலில் கரை ஒதுங்கியது கடற்கன்னியா? வைரல் புகைப்படங்கள்
papua new guinea mermaid viral images கடற்கன்னி போன்ற அமைப்பை கொண்ட உயிரினம் தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது
பப்புவா நியூ கினியா பசிபிக் கடலில் கரை ஒதுங்கியது கடற்கன்னியா? வைரல் புகைப்படங்கள் இதோ
கடற்கன்னி போன்ற அமைப்பை கொண்ட உயிரினம் தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடு, பப்புவா நியூ கினியா. இதன் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி (Porl Moresby). இந்நிலையில் நேற்று முன் தினம் அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல், கரை ஒதுங்கியுள்ளது. நியூ அயர்லேண்டர்ஸ் ஒன்லீ (New Irelanders Only) எனும் முகநூல் பக்கத்தில் இது குறித்த தகவல்கள் முதலில் வெளியிட்டுள்ளது
அந்த புகைப்படத்தினை பார்க்கும் போது அது அச்சு அசலாக கடற்கன்னி போன்று இருப்பதால் உண்மையான கடற்கன்னி என அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றதுமேலும் கடல் கன்னி இப்படி தான் இருக்குமோ என மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி வருகிறது
தென்மேற்கு பசிபிக் கடல் சிம்பேரி தீவில் கரை ஒதுங்கியது கடற்கன்னி இல்லை எனவும் அவை கிளாப்ஸ்டர் வகை உயிரினம் என ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்
தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த “கிளாப்ஸ்டர்” உயிரினம் உயிரிழந்து கடலிலேயே நீண்ட நாட்கள் பிற மீன்களால் உண்ணப்பட்டு தோல் மற்றும் மாமிசத்தை இழந்துள்ளது மேலும் சடலத்தின் பெரும்பகுதி அழுகியிருக்கிறது தின் உடல் எடை, நீளம், மற்றும் இவை எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்த தகவல்களை அறிவது கடினம் என்றும் அந்த வலைதளம் தெரிவிக்கிறது.இவை globster என்பது ஒருவகையான கடற்வாழ் பாலூட்டி உயிரினங்கள் என்பதை தவிர மேற்கொண்டு எதுவும் சொல்வது கடினம் என ஆழ்கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு:-
https://www.facebook.com/photo/?fbid=880578550292498&set=pcb.880579210292432