Money Rain 1 மில்லியன் டாலர் பணத்தை ஹெலிகாப்டரில் இருந்து கீழே வீசிய நபர் வைரல் வீடியோ
Kamil Bartosek பண மழை வைரல் வீடியோ
செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான கமில் பார்டோ செக் என்பவர் ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வீசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த கமில் பார்டோசெக் இவர் தனது ஒன் மேன் ஷோ திரைப்படத்தை ப்ரமோட் செய்வதற்காக தன் படத்தில் வரும் ஒரு puzzleல் ஒரு தகவல் மறைந்துள்ளதாகவும் அதை யார் கண்டுபிடித்து கொடுக்கிறார்களோ அவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசாக தருவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
ஆனால் இறுதி வரை போட்டியாளர்கள் யாரும் puzzle-யை தீர்க்க முடியாததை தொடர்ந்து, போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசு தொகையை பிரித்து வழங்க போட்டி தொகுப்பாளர் முடிவு செய்து இதனை அடுத்து போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு ஓர் லொக்கஷனை மெயில் அனுப்பினார்
லொக்கேஷனை கண்டுபிடித்து வருபவர்களுக்கு பரிசு கிடைக்கும் என்று அவர் அறிவித்தார் இறுதியில் $1 மில்லியன் பரிசு தொகையை கொடுத்த வாக்குறுதி படி, குறிப்பிட்ட நேரத்தில் லைசா நாட் லேபெம் நகருக்கு அருகே ஹெலிகாப்டரில் இருந்து சுமார் $1 மில்லியன் பரிசு தொகையை பண மழையாக கொட்டினார்.

ஒரு மில்லியன் டாலரை ஒரு பெரிய கன்டெய்னரில் நிரப்பி ஹெலிகாப்டர் மூலம் வானத்திலிருந்து வீசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
வீடியோ பார்க்க:-
https://www.instagram.com/reel/Cy09tWktXe7/