Paris Olympics 2024 ஒலிம்பிகில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மனு பாக்கர்
ஒலிம்பிகில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மனு பாக்கர்
2024 அண்டுக்கான கோடை ஒலிம்பிக்குப் போட்டிகள் பிரான்சின் தலைநகர் பாரிசில் ஜூலை 26 தொடங்கி உள்ளது, இப்போட்டி ஆகஸ்ட்11 வரை நடக்க உள்ளது.
இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் மனு பாக்கர். நடப்பு ஒலிம்பிக் தொடரின் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். மேலும் ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
இப்போட்டியில் தென்கொரிய வீராங்கனைகள் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பிடித்து தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளனர்.ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதலில் 5 ஆவது பதக்கம் கிடைத்துள்ளது
மனு பாக்கரின் இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி, ”வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கம்”இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மனு பாக்கருக்கு ( @realmanubhaker ) வாழ்த்துகள்!அபாரமான சாதனை! #Cheer4Bharat ‘ எனக் குறிப்பிட்டு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
Paris Olympics 2024
ஒலிம்பிக் போட்டி அட்டவணை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்