AIIMS Common Recruitment Exam 2023 எயிம்ஸ் மருத்துவமனையில் 3036 காலி பணியிடங்கள் அறிவிப்பு
Common Recruitment Examination for AIIMS 2023 AIIMS வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
AIIMS Common Recruitment Exam 2023
Delhi Aiims Hospital Recruitment ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (AIIMS) குரூப் பி மற்றும் சி பதவிகளுக்கான 3036 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள துணை மருத்துவ மற்றும் பிற ஊழியர்கள்களுக்கான பொது ஆட்சேர்ப்பு தேர்வை (CRE) அறிவித்துள்ளது
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் aiimsexams.ac.in அல்லது creaiims.aiimsexams.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். CRE AIIMS Recruitment 2023 பணி:- Group B & C பதவிக்கு என மொத்தம் 3036 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:-
AIIMS Common Recruitment Examination 2023 ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு கல்விதகுதி கொடுக்கப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரியாக படிக்கவும்
எ.கா. 10, 12, டிப்ளமோ, டிகிரி, முதுகலை டிகிரி, என அனைத்து வித படிப்புகளுக்கும் ஏற்ற வேலை வாய்ப்புகள் உள்ளது
வயது வரம்பு:-
01.12.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள், ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:-
பொது / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் : ரூ.3000/- (ரூபாய் மூன்று ஆயிரம் மட்டும்) பட்டியல்/ பழங்குடியினர் / பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் – ரூ.2400/ (ரூபாய் இரண்டுஆயிரத்து நானூறு மட்டும்)
தேர்வில் கலந்து கொள்ளும் பட்டியல்/ பழங்குடியின விண்ணப்பதாரர்களின் விண்ணப்பக் கட்டணம் விரைவில் தேர்வு முடிவுகள் அறிவித்த பிறகு திருப்பித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள்: விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க:- CLICK HERE
https://creaiims.aiimsexams.ac.in/
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க நாள்:-17.11.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
01.12.2023 @ 05.00 PM
தேர்வு நடைபெறும் தேதி :-
18.12.2023 & 20.12.2023
மேலும் விவரங்களுக்கு:-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க:-
விண்ணப்பிப்பது எப்படி:-
CRE AIIMS Recruitment 2023 எயிம்ஸ் ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படிக்கவும்
அடுத்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பிக்கும் பதவியைத் தேர்ந்தெடுத்து சரியான தகவல்கள் அளித்து விண்ணப்பிக்கவும்
அதன் பின்பு உங்கள் கல்வி விவரங்கள்/பணி அனுபவத்தை பதிவிடுங்கள்
அதன்பின்பு தேவையான ஆவணங்கள் உங்கள் புகைப்படம், கையொப்பம் மற்றும் தொடர்புடைய அனைத்து சான்றிதழின் ஸ்கேன் செய்து அப்லோடு செய்யவும்
அதன்பின்பு விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் கட்டவும்
அதன்பின்பு விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்