JOB

sagar mitra recruitment சென்னையில் சாகர் மித்ரா பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Chennai Fisheries Department Recruitment சென்னை மீன்வளத்துறை ஆட்சேர்ப்பு

sagar mitra recruitment 2023 சென்னையில் சாகர் மித்ரா பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

sagar mitra recruitment

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் தற்காலிக சாகர் மித்ரா பணியாளர்கள் நியமித்தல் பிரதமமந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ/வருவாய் கிராமங்களுக்கு தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள் (Sagar Mithra) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

விண்ணப்பதாரர்கள் மீன்வள அறிவியல் (Fisheries Science), கடல் உயிரியல் (Marine Biology), மற்றும் (Zoology) ஆகிய பிரிவுகளில் முதுகலை/இளங்களை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்கண்ட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), நுண்ணுயிரியல் இல்லாத பட்சத்தில் இயற்பியல் (Microbiology), தாவரவியல் (Botany) மற்றும் உயிர் வேதியியல் (Biochemistry), ஆகிய பிரிவுகளில் ஒன்றில் முதுகலை / இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு ஏதேனும் ஒன்றில் அளிக்கப்படும்.

மேற்கண்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தகவல் தொழில்நுட்பம் (IT) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் சென்னை மாவட்ட மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

31.07.2023 அன்றைய தேதியின்படி வயது 35-க்குள் இருக்க வேண்டும் மற்றும் நன்கு தமிழ் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

மாதாந்திர ஊக்க ஊதியம் ரூ.15,000/- வழங்கப்படும். விருப்பமுள்ளநபர்கள் 25.10.2023 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பதினை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அலுவலக முகவரி: மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.77, சூரியநாராயணா செட்டி தெரு, இராயபுரம், சென்னை-13

அலுவலக தொலைபேசி எண்: 9384824245/ 9384824407

Related Articles

Back to top button