JOB

Ettukudi Murugan Temple Recruitment 2024 10வது பாஸா இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு முழு விவரம்

Ettukudi Murugan Temple Recruitment 2024 10வது பாஸா இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு முழு விவரம்

பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் எட்டுக்குடியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறை வயது வரம்பு:- விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம்:- மாத சம்பளம் ரூ15300லிருந்து – ரூ.48700/- என்று அறிவிக்கப்பட்டுள்ளது விண்ணப்பிக்க கடைசி நாள்;- இப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 09.04.2024

Ettukudi Murugan Temple Recruitment 2024
Ettukudi Murugan Temple Recruitment 2024

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், எட்டுக்குடி திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு
இத்திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்க்காணும் வெளித்துறை பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியுடைய 18 முதல் 45வயது நிரம்பிய இந்து மதத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி :-எழுத்தர்

கல்வித்தகுதி:- பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி

விண்ணப்ப படிவம், தகுதிகள், நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை www.hrcetngovin என்ற இணையதளத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதிச்சான்றுகளுடன் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ 10.032024 ந்தேதி முதல் 09.04.2024 தேதி LDIT 60.00 5.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்திற்கு வரப்பெறவேண்டும். மேற்படி தேதிக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், எட்டுக்குடி, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். அஞ்சல் எண்:610204

நிபந்தனைகள்:-

1 விண்ணப்பதாரர் 10.032024ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. இந்து மதத்தினைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

3. இவ்விளம்பரம் வெளியிடப்பட்ட தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

4. விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox copy only) பெற்று அனுப்பப்பட வேண்டும். சான்றொப்பம் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

5. விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் (Transfer certificate) சான்றிடப்பட்ட நகல் இணைக்கப்பட வேண்டும்.

6. விண்ணப்ப படிவத்தில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலும், கேட்கப்பட்ட சான்று நகல்கள் சான்றொப்பம் இன்றியும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும்.

7. பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் பணியில் சேர வரும் நேரத்தில் விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் உடல் தகுதி சான்றிதழ்களின் அசல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

8. விண்ணப்பங்களை அனுப்பும் போது மேல் உறையின் மீது பதவியின் பெயரை குறிப்பிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். அஞ்சல் உறை இல்லாத விண்ணப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும்.

9. நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கு எவ்வித பயணப்படியும் வழங்கப்படமாட்டாது.

10. விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் கல்விதகுதி மற்றும் பிற தகுதிக்குரிய ஆவணங்களில் அசல் சான்றிதழ்கள் நேர்முக தேர்வின்போது கண்டிப்பாக கொண்டு வரப்பட வேண்டும்.

11. விண்ணப்பதாரரால் தெரிவிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் சரியானவை என உறுதியளிக்க வேண்டும். தவறான தகவல்கள் அல்லது போலியான ஆவணங்கள் ஏதேனும் அளித்து பணி நியமன ஆணை பெறப்படும் பட்சத்தில் எவ்வித முன் அறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்தும். சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கைக்களுக்கும் உட்படுத்தப்படுவர்.

12 நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே பரிசீலனைக்கு பின்னர் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர். தகுதி இல்லாத விண்ணப்பங்களுக்கு திருக்கோயிலில் இருந்த எவ்வித தகவலும் அனுப்பப்படமாட்டாது.

13. விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் சான்றுகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் உண்மைத்தன்மை குறித்து பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

14. திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள். அவர்களின் வாரிசுதாரர்கள். அரசு பணி மற்றும் பொது நிறுவனங்கள். இதர திருக்கோயில்களில் பணிபுரிந்து தண்டனை CHITTE GODELDITS பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

15. உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் காரணம் தெரிவிக்கப்படாமல் நிராகரிக்கப்படும்.

16. பணிநியமனம் அரசாணை எண் 114 சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் (அநி 42) நாள் 03.09.2020 விதிகளுக்குட்பட்டது. அரசாணை எண் 219 சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் (அநி 42) நாள் 02.09.2022 விதிகளுக்குட்பட்டது.

17. தேர்வு முறையானது அடிப்படைக் கல்வித்தகுதி. அனுபவம், செயல்முறைத் தேர்வுகள். கூடுதல் தகுதிகள் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.

18. விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

19. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் பணியிட வரிசை எண். மற்றும் எந்த பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு செயல் அலுவலர்,அருள்மிகுசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், எட்டுக்குடி, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். அஞ்சல் எண்:810204 என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.மேலும் ரூ.30/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும், அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

20. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 09.04.2024 ந்தேதி மாலை 5.45 க்குள் திருக்கோயில் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். மேற்படி தேதிக்கு முன்னதாகவோ அல்லது பின்தாகவோ வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

MORE DETAILS CLICK HERE

https://hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php

Ettukudi Murugan Temple Recruitment 2024

Related Articles

Back to top button