indian army recruitment 2023 இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு 08ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
indian army recruitment 2023 tamil nadu இந்திய ராணுவத்தில் அக்னிவீர் வேலை வாய்ப்பு
இந்திய ராணுவத்தில் வெளியான அறிவிப்பில் 2023 – 2024 ஆம் ஆண்டுகளுக்கென அக்னிவீர் பிரிவின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்காக கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ள அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணியின் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணியின் மூலம் நாட்டுக்கு சேவை செய்ய விருப்பம் மற்றும் தகுதியுள்ள இளம் வீரர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இந்த வகையில் அக்னிவீர் பிரிவின் கீழ் காலியாக உள்ள பணிக்கு வருகின்ற நவம்பர் மாதம் கிருஷ்ணகிரியில் நடைபெற இருந்த அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணியின் தேதி மாற்றியமைக்கப்பட்டு டிசம்பர் மாதம் 08ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பேரணியில் 08ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். மேலும் இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 17.5 வயது முதல் 21 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
மேலும் விவரங்களுக்கு:-
https://joinindianarmy.nic.in/Default.aspx?id=109&lg=eng&var0=1050
அக்னி வீர் திட்டம் முழு விவரம்:-
அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் 4 ஆண்டுகள் ராணுவத்தில் குறுகிய கால வீரராக (முப்படையில் ஏதாவது ஒன்றில்) சேர முடியும்.
4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்கு பின் வெளியேறலாம்
விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம் இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள் பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும்17.5 – 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி.
இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும். அதாவது 4வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும். வருமான வரி கிடையாது. பென்சன் இல்லை தனிப்பட்ட இன்சூரன்ஸ், மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்கப்படும். இந்த 4 வருட ராணுவ பணி காலத்தில், ஏதாவது ராணுவ சண்டையில் காயங்கள் ஏற்பட்டால் அதற்கு 44 லட்சம் ரூபாய் வரை, காயத்தை பொறுத்து நிவாரணமாக வழங்கப்படும்.