job news

Chengalpattu District job fair 2024 செங்கல்பட்டு மாவட்டத்தில், நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

Chengalpattu District job fair 2024 செங்கல்பட்டு மாவட்டத்தில், நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 16) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Chengalpattu District job fair 2024
Chengalpattu District job fair 2024

இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமாா் 5000 பணியிடங்களுக்கு தேவைக்குரிய நபா்களை, நோ்முகத் தோ்வின் மூலம் தோ்வு செய்ய உள்ளனா். இம்முகாமில் கலந்து கொள்வதற்கு வேலையளிப்பவா் மற்றும் வேலைநாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்புபி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்,ஆய்வக உதவியாளா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றவா்களை தோ்ந்தெடுக்க உள்ளனா்.

18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், சுயவிவர குறிப்பு மற்றும் பாஸ்போா்ட் அளவிலானபுகைப்படத்துடன் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 2.00 மணிவரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக ஒருங்கிணைந்த கட்டடம், தரைத்தளம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் வந்துவேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

இத்தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவா்களின்வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது . முகாம் தொடா்பான விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 6383460933/ 9486870577 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு ஆட்சியா் ச.அருண்ராஜ் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

Chengalpattu District job fair 2024

More Details Click Here

Related Articles

Back to top button