Night Watchman Job எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் தமிழக அரசில் இரவுக்காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
security guard night shift jobs in tamil nadu

Night Watchman Job இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக காலியாக உள்ள இரவுக்காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
இரவுக்காவலர்
மாத சம்பளம்:-
மாத சம்பளமாக ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை வழங்கப்படும்
கல்வி தகுதி:-
எழுதபடிக்கத் தெரிந்திருந்தால் போதும்
வயது வரம்பு :-
பொதுப் பிரிவினர்: 18 வயது முதல் 32 வயது வரை
ஓபிசி பிரிவினர்: 18 வயது முதல் 34 வயது வரை
ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் : 18 வயது முதல் 37 வயது வரை
நிபந்தனைகள்:-
விண்ணப்பதாரர்கள் கல்விதகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
திருவாடானை ஊராட்சி ஒன்றிய பகுதியில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லையெனில் இம்மாவட்டத்தைச்சேர்ந்த பிற ஒன்றிய விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த விண்ணப்பததாரர்களுக்குவட்டாட்சியரிடம் பெற்ற சான்றின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பங்கள் பெறப்படும் நாள்: அலுவலக வேலை நாட்களில் 15.12.2023 முதல் 19.01.2024 வரை பிற்பகல் 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவே அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
ஆணையாளர் / வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஊராட்சி ஒன்றியம்,
திருவாடானை. இராமநாதபுரம் மாவட்டம் – 623407
https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2023/12/2023121464.pdf
https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2023/12/2023121473.pdf