JOB

tamilnadu govt driver job recruitment தமிழக அரசில் டிரைவர் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

Driver Jobs in Tamilnadu Government வருவாய்த் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிகலாம்

நீலகிரி வருவாய்த் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணி:-

ஓட்டுநர்

கல்வி தகுதி:-

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2 வருட பணி அனுபவம் இருக்கவேண்டும் HMV / LMV உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

01.07.2023 தேதியின் படி, பொது பிரிவினருக்கு 18 வயது முதல் 32 வயது வரை இருக்கவேண்டும். வயது வரம்பில் தளர்வு உண்டு மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

மாத சம்பளம்:-

மாதம் ரூ.19500 – 62000/-

விண்ணப்பிக்க:-

உங்களை பற்றிய பயோடேட்டாவுடன் தேவையான சான்றிதழ் இனைத்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்

தபால் முகவரி:-

மாவட்ட ஆட்சியர் நீலகிரி

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

30.11.2023

மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள அதிகார்பூர்வ அறிவிப்பை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

tamilnadu govt driver job recruitment
tamilnadu govt driver job recruitment

நீலகிரி மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள 3 ஈப்பு ஓட்டுநர் பணியிங்களை நிரப்ப, விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட 3 பணியிடங்கள் ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (முன்னுரிமை பெற்றவர்) (Schedule Caste – Arunthathiyar on preferential Basis (Priority), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமை பெற்றவர்) (Most Backward Classes and Denotified Communites (Priority)) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர) (முன்னுரிமை பெற்றவர (Backward Classes (Other than Backward Class Muslims) (Priority) எனும் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும்.

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு குறைந்த பட்சம் 08-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,

கூடுதலாக HMV/ LMV Licence வைத்திருக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

01.07.2023 அன்றைய நிலையில் குறைந்தபட்ச 18 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். மேலும் 01.07.2023 அன்றைய நிலையில் அதிகபட்சமாக பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) 34 வயதுக்குள்ளும் (முன்னாள் இராணுவத்தினராக இருப்பின் 48 வயதுக்குள்ளும்) மற்றும் ஆதிதிராவிடர் (SC&SCA) மற்றும் பழங்குடியினர் (ST) 37 வயதுக்குள் (முன்னாள் இராணுவத்தினராக இருப்பின் 53 வயதுக்குள்ளும்) இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை, உரிய சான்றிதழ்களின் நகல்களுடன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பதிவு தபால் மூலம் 30.11.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தாமதமாக பெறப்படும் மனுக்கள் பரிசீலனை செய்யப்படமாட்டாது. விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுடையவர்களை நேர்முகத் தேர்வுக்கு வருமாறு பின்னர் தனியே அழைப்பாணை அனுப்பப்படும் என திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர்

Related Articles

Back to top button